
சமைக்க தேவையானவை
- கேரட், தக்காளி, கத்தரிக்காய், குடமிளகாய், பச்சைமிளகாய் – தலா 1
- இஞ்சி – சிறு துண்டு
- பாசிப்பருப்பு – ஒரு கப்
- சாம்பார் பொடி – ஒரு டீஸ்பூன்
- சோம்பு , பொட்டுக் கடலை – தேவையான அளவு
- தேங்காய் அரைத்த பொடி – 2 டீஸ்பூன்
- புளித் தண்ணீர் – ஒரு கப்
- சின்ன உருளைக் கிழங்கு, பீன்ஸ் – 6
- கடுகு – ஒரு டீஸ்பூன்
- உப்பு , மஞ்சள் – தேவையான அளவு
- பொடியாக நறுக்கிய கொத்தமல்லி சிறிதளவு
- எண்ணெய் – அரை டீஸ்பூன்
செய்முறை
முதலில் காய்கறிகளை பொடியாக நறுக்கிக் கொள்ளவேண்டும் . பின்பு பாசிப்பருப்பை வேக வைத்துக் கொள்ளவும்.
புளித் தண்ணீரை கடாயில் விட்டு, சாம்பார் பொடி, சோம்பு பொடி ,உப்பு, மஞ்சள், நறுக்கிய காய்களைப் போட்டுக் கொதிக்க விடவேண்டும்.
இப்பொழுது காய்களை சிறிது எண்ணெயில் வதக்கியும் சேர்க்கலாம். இட்லிக்கு பொருத்தமாக இருக்கும் இந்தக் காய்கறி குழம்பு.
குறிப்பு
மணமணக்கும் காய்கறி குழம்பு செய்ய முதலில் அடுப்பை மிதமான தீயில் வைத்து கொள்ளவேண்டும். பிறகு தேவையான பொருட்களை அதாவது காய்கறிகளை தண்ணீர் கொண்டு அலச வேண்டும். எண்ணெய் மற்றும் உப்பு தேவையான அளவு இருத்தால் சுவையாக இருக்கம்.
உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
+1
+1
+1
+1
+1
+1