பரோட்டாபாஸ்ட் ஃபுட்

காய்ன் பரோட்டா

Coin parotta

சமைக்க தேவையானவை


  • மைதா – 2 கப்
  • உப்பு – தேவைக்கு
  • நெய் – 2 டீஸ்பூன்
  • தண்ணீர் – தேவைக்கு
  • பேக்கிங் சோடா – கால்ஸ்பூன்
  • எண்ணெய் – கால் கப்


செய்முறை


முதலில் பேக்கிங் சோடா, நெய் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். மைதா மாவு சேர்க்கவும், தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து பிசறி வைக்கவும். அரை மணி நேரம் கழித்து நன்கு குழைத்து பெரிய உருண்டையாக்கி வைக்கவும்.

பின்பு அரைமணி நேரம் கழித்து பெரிய உருண்டையை இரண்டாக பிரிக்கவும். ஒரு பிரிவை உருண்டையாக்கி சப்பாத்தி கட்டையில் அல்லது பெரிய தட்டில் பரத்தவும். எண்ணெய் தடவவும்,சிறிது மாவு தூவவும். அதனை ரோல் செய்யவும். கத்தி கொண்டு ஆறாக கட் செய்து கொள்ளவும்.இதே போல் மற்ற பிரிவையும் தயார் செய்யவும்.

மொத்தம் 12 பகுதி கிடைக்கும்.ஒவ்வொன்றாக ரோல் செய்த பக்கம் மேல் தெரியும் படி வைத்து சிறிது மாவு பிரட்டி சப்பாத்தி உருளை கொண்டு சிறியதாக பரத்தி எண்ணெய் சிறிது விட்டு சுட்டு எடுக்கவும்.சுவையான காய்ன் பரோட்டா ரெடி. இதனை மட்டன், சிக்கன் குருமா, வெஜ் குருமாவுடன் பரிமாறவும்.

உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
பகிருங்கள்
Source
Image

அம்மா சமையல்

அம்மா சமையல் என்றால் எனக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே பிடிக்கும். அந்த கை பக்குவம் வேற யாருக்கும் வரவே வராது. இன்னும் என்னோடு எங்க அம்மா சமையல் வாசம் ஒட்டிக் கொண்டிருக்கிறது. தாமிரபரணி தண்ணீர் என்பதால் எங்க அம்மா எதை வைத்துக் கொடுத்தாலும் அந்த சுவையே தனிதான். இங்கு சமையல் குறித்த தகவல்கள் வழங்குவது எல்லாம் சமைக்கத் தெரியாத மற்றும் சதா ஒரே சமையலை செய்து கொடுக்கும் பெண்களுக்காக இந்த பக்கம். எனது பெயர் கமலி.

Leave a Reply

Back to top button