சூப்சைவ சூப்டயட் உணவுகள்

கார்ன் சூப்

Corn Soup

சமைக்க தேவையானவை


  • வெள்ளை சோள முத்து – கால் கப்
  • பெரிய வெங்காயம் – ஒன்று
  • பூண்டு விழுது – 2 டீஸ்பூன்
  • மிளகுத்தூள் – அரை டீஸ்பூன்
  • சில்லி சாஸ் – 2 டீஸ்பூன்
  • வெண்ணெய் – 3 டீஸ்பூன்
  • முட்டைகோஸ் – கால் கப்
  • உப்பு – தேவைக்கேற்ப


செய்முறை


முதலில் வெள்ளை சோள முத்தை 10 மணி நேரம் ஊறவைக்கவும். ஊறிய வெள்ளை சோள முத்து, நறுக்கிய முட்டை கோஸ் உடன் நீர் சேர்த்து, குக்கரில் 2 விசில் வரும் வரை வேகவிடவும். பின்னர் நீரை வடிகட்டி காய்கறி, தண்ணீரை தனித்தனியாக வைக்கவும்.

கடாயில் வெண்ணெய் விட்டு, பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கி, பூண்டு விழுது, உப்பு, சில்லி சாஸ் சேர்த்து மேலும் வதக்கி, காய்கறி வேகவைத்த நீரை ஊற்றி ஒரு கொதி விடவும்.

பிறகு, வடிகட்டி வைத்த கோஸ், சோளத்தை சேர்த்துக் கிளறி, 5 நிமிடங்களுக்குப் பிறகு மிளகுத்தூள் தூவி இறக்கி பின்புபரிமாறவும்.

உங்களுக்கு பிடித்துள்ளதா ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
பகிருங்கள்
Source
Image

அம்மா சமையல்

அம்மா சமையல் என்றால் எனக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே பிடிக்கும். அந்த கை பக்குவம் வேற யாருக்கும் வரவே வராது. இன்னும் என்னோடு எங்க அம்மா சமையல் வாசம் ஒட்டிக் கொண்டிருக்கிறது. தாமிரபரணி தண்ணீர் என்பதால் எங்க அம்மா எதை வைத்துக் கொடுத்தாலும் அந்த சுவையே தனிதான். இங்கு சமையல் குறித்த தகவல்கள் வழங்குவது எல்லாம் சமைக்கத் தெரியாத மற்றும் சதா ஒரே சமையலை செய்து கொடுக்கும் பெண்களுக்காக இந்த பக்கம். எனது பெயர் கமலி.

Leave a Reply

Back to top button