
சமைக்க தேவையானவை
- பாசுமதி அரிசி – 1 கப்
- எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
- பூண்டு – 1/4 கப் (பொடியாக நறுக்கியது)
- சின்ன வெங்காயம் – 10 (பொடியாக நறுக்கியது)
- ஸ்பிரிங் ஆனியன் – 3 டேபிள் ஸ்பூன்
- சில்லி சாஸ் – 1 டீஸ்பூன்
- சோயா சாஸ் – 1 டீஸ்பூன்
- வினிகர் – 1/2 டீஸ்பூன்
- சில்லி ப்ளேக்ஸ் – 1 டேபிள் ஸ்பூன்
- மிளகுத் தூள் – 1 டீஸ்பூன்
- உப்பு – சுவைக்கேற்ப
செய்முறை
முதலில் பாசுமதி அரிசியை நீரில் போட்டு 20-30 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின் அரிசியை நன்கு நீரில் 2 முறை கழுவிக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி கொதிக்க வைத்து, அதில் சிறிது உப்பு மற்றும் 1/2 டீஸ்பூன் எண்ணெய் சேர்க்க வேண்டும்.
அதன் பின் கழுவிய அரிசியைப் போட்டு கிளறி, நன்கு வேக வைக்க வேண்டும். 5 நிமிடம் கழித்து அரிசி வெந்துள்ளதா என்று சோதிக்க வேண்டும். இன்னும் வேகாமல் இருந்தால், மீண்டும் 3 நிமிடம் வேக வைக்க வேண்டும். சாதம் நன்கு வெந்ததும், அடுப்பை அணைத்துவிட்டு, உடனே நீரை வடிகட்டிவிட வேண்டும். அதன் பின் சாதத்தை ஒரு அகலமான பாத்திரத்தில் போட்டு உலர வைக்க வேண்டும்.
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பின் அதில் வெங்காயம், ஸ்பிரிங் ஆனியன் மற்றும் உப்பு சேர்த்து வதக்க வேண்டும்.
அடுத்து அதில் சோயா சாஸ், சில்லி சாஸ் மற்றும் வினிகர் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். பின்னர் வேக வைத்துள்ள சாதத்தைப் போட்டு, அதன் மேல் சில்லி ப்ளேக்ஸ், மிளகுத் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறி இறக்கினால், சுவையான கார்லிக் சில்லி ஃப்ரைடு ரைஸ் தயார்.