குழம்பு

காலிபிளவர் குழம்பு

Cauliflower Kulambu

சமைக்க தேவையானவை


 • காலிபிளவர் – 1
 • உருளைக்கிழங்கு – 3
 • தக்காளி – 4
 • பச்சைப் பட்டாணி – ¼ கோப்பை
 • பெரிய வெங்காயம் – 2
 • உப்பு, கொத்துமல்லி – தேவையான அளவு

அரைக்க

 • மிளகாய்த்தூள் – 2 தேக்கரண்டி
 • தனியாத்தூள் – ½ தேக்கரண்டி
 • சோம்பு – ½ தேக்கரண்டி
 • இஞ்சி – ஒரு துண்டு
 • பூண்டு – 6 பற்கள்
 • தேங்காய்த் துருவல் – 3 மேசைக்கரண்டி
 • பொட்டுக்கடலை – 2 தேக்கரண்டி


செய்முறை


முதலில், காலிபிளவரைத் தனித்தனிப் பூவாக உதிர்த்து உப்பு நீரில் போட்டுக் கழுவிக் கொள்ளவும். உருளைக்கிழங்கைத் தோல் சீவி, சற்றுப் பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளுங்கள். பெரிய வெங்காயம், தக்காளி ஆகியவற்றைப் பொடியாக நறுக்குங்கள். பின்னர் அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாகப் போட்டு அரைத்துக் கொள்ளுங்கள்.

பிறகு, பாத்திரத்தை வைத்து, எண்ணெயை ஊற்றி, காய்ந்ததும் பட்டை, கறிவேப்பிலை போட்டுத் தாளித்து, வெங்காயம் சேருங்கள். வெங்காயம் நன்கு வதங்கியதும், தக்காளி, காலிபிளவர், உருளைக்கிழங்கு, பச்சைப் பட்டாணி, தேவையான உப்பு சேர்த்துப் பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும். பிறகு, இரண்டு கோப்பை தண்ணீர் சேர்த்து, காலிபிளவர், உருளைக் கிழங்கு, பட்டாணி வேகும் வரை கொதிக்க விட வேண்டும்.

பின்னர், அரைத்த விழுதைப் போட்டு, ஒரு கோப்பை தண்ணீரை ஊற்றி மீண்டும் கொதிக்க விடவேண்டும். 10 நிமிடம் குழம்பு கொதித்ததும், கொத்துமல்லியைத் தூவி இறக்குங்கள். சுவையான காலிபிளவர் மசாலா குழம்பு தயார்.

உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
பகிருங்கள்

அம்மா சமையல்

அம்மா சமையல் என்றால் எனக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே பிடிக்கும். அந்த கை பக்குவம் வேற யாருக்கும் வரவே வராது. இன்னும் என்னோடு எங்க அம்மா சமையல் வாசம் ஒட்டிக் கொண்டிருக்கிறது. தாமிரபரணி தண்ணீர் என்பதால் எங்க அம்மா எதை வைத்துக் கொடுத்தாலும் அந்த சுவையே தனிதான். இங்கு சமையல் குறித்த தகவல்கள் வழங்குவது எல்லாம் சமைக்கத் தெரியாத மற்றும் சதா ஒரே சமையலை செய்து கொடுக்கும் பெண்களுக்காக இந்த பக்கம். எனது பெயர் கமலி.

Leave a Reply

Back to top button