
சமைக்க தேவையானவை
- சப்பாத்தி மாவு – 4 கப்
- இஞ்சி – பொடியாக நறுக்கியது
- மைதா – 2 கப்
- கொத்தமல்லி தழை
- காலிப்ளவர் – தேவையான அளவு
- பச்சை மிளகாய் – 4 பொடியாக நறுக்கியது
- சீரகம், மிளகாய் தூள், கரம் மசாலா – தேவையான அளவு
செய்முறை
முதலில் காலிப்ளவரை காய்கறி துருவும் க்ரேட்டரில் துருவி வைத்துக் கொள்ளவும். சப்பாத்தி மாவை பிசைந்து வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி சீரகம், இஞ்சி, பச்சை மிளகாய் போட்டு நன்கு வதக்கவேண்டும்.
பின்னர் அதில் துருவி வைத்திருக்கும் காலிப்ளவரை போட்டு நன்கு வதக்கவும். 5 நிமிட வதக்கிய பிறகு மிளகாய் பொடி, கரம் மசாலா, உப்பு போட்டு நன்கு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பின் கொத்தமல்லி தழை தூவி இறக்கி வைக்கவும்.
நன்கு ஆற விடவும் அதன் பின், பிசைந்து வைத்திருக்கும் மாவை உருண்டையாக்கி அதை தேய்த்து அதன் மேல் படத்தில் உள்ளது போன்று கலவையை வைத்து பரப்பி விடவும் மற்றொரு சப்பாத்தியை அதன் மேல் வைத்து படத்தில் உள்ளது போன்று ஓரங்களை சுருட்டி விடவும்.
அதனை கல்லில் போட்டு சுட்டு எடுத்து சுட சுட டேஸ்டியான சப்பாத்தியாக பரிமாறவும். உள்ளே இருக்கிற காலிப்ளவர் ஸ்ட்ஃப்க்கு ஒன்னு சாப்டறவங்க, கண்டிப்பா மேலும் கேட்டு சாப்பிடுவாங்க.