சைவம்பிரியாணிபிரியாணி சைவம்

காளான் மீல்மேக்கர் பிரியாணி

mushroom biryani

சமைக்க தேவையானவை


  • பட்டன் மஷ்ரூம் (காளான்) – 200 கிராம்
  • மீல் மேக்கர் – 20 உருண்டைகள்
  • கிராம்பு – 2
  • பிரியாணி இலை – 1
  • புதினா, கறிவேப்பிலை, கொத்துமல்லி இலை – கொஞ்சம்
  • இஞ்சி – சிறுதுண்டு
  • பூண்டு – 5பல்
  • பட்டை – 3 துண்டு
  • ஏலக்காய் – 1
  • தக்காளி – 1
  • எண்ணெய் + நெய் – 4 டேபிள்ஸ்பூன்
  • கொத்தமல்லித்தூள் – 1 டீஸ்பூன்
  • பச்சைமிளகாய் – 2
  • வெங்காயம் – 1
  • பிரியாணி மசாலா – 1 1/2 டேபிள்ஸ்பூன்
  • தயிர் – 2 டேபிள்ஸ்பூன்
  • பாஸ்மதி அரிசி – 1 1/4கப்
  • மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்
  • மஞ்சள்த்தூள் – 1/4 டீஸ்பூன்
  • உப்பு – தேவைக்கு


செய்முறை


முதலில் அரிசியைக் களைந்து அரைமணி நேரம் ஊறவைக்கவேண்டும் .பின்பு வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை நீளவாக்கில் நறுக்கி வைக்கவேண்டும் .பின்னர் மீல்மேக்கரை கொதிக்கும் நீரில் 10 நிமிடங்கள் போட்டெடுத்து குளிர்ந்த நீரில் அலசி, தண்ணீரில்லாமல் பிழிந்து வைக்கவும். பொடிக்கக் கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக பொடித்து கொள்ள வேண்டும். பின் காளானை சுத்தம் செய்து இரண்டாக நறுக்கவும்.

பின்னர் ஒரு பாத்திரத்தில் காளான், மீல் மேக்கர், மஞ்சள்தூள் மல்லித்தூள்,, மிளகாய்த்தூள், பிரியாணி மசாலா, தயிர், பொடித்த மசாலா, உப்பு, கொஞ்சம் புதினா இலைகள் எல்லாம் சேர்த்து நன்றாக கலந்து 20 நிமிடங்கள் வைக்கவும். பிறகு குக்கரில் எண்ணெய்+நெய் ஊற்றி காயவைத்து வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

பின்னர் வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை போட்டு வதக்கவும். அடுத்து தக்காளி நன்றா வதங்கியதும் ஊறவைத்த மஷ்ரூம் மீல்மேக்கர் கலவை, மீதியிருக்கும் புதினா மற்றும் கறிவேப்பிலை புதினாவைச் சேர்த்து வதக்கவும். வதக்கும்போது தீயை மிதமாக வைத்து குக்கரை விசில் இல்லாமல் மூடி வைத்து அவ்வப்பொழுது கிளறிவிட்டு எண்ணெய் பிரிந்து வரும்வரை வதக்கவேண்டும்.

பிறகு அதில் ஊறவைத்த அரிசியை சேர்த்து 1 1/2 கப் தண்ணீர் விட்டு உப்பு அளவை சரிபார்த்து குக்கரை மூடி 3 விசில் போட்டு இறக்கவும். சூப்பரான மஷ்ரூம் மீல் மேக்கர் பிரியாணி ரெடி.


காளான் மருத்துவ பயன்கள்

காளான் இரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. இதனால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்த நாளங்களின் உட்பரப்பில் உண்டாகும் கொழுப்பு அடைப்பைத் தடுக்கிறது.

காளானில் உள்ள லென்ட்டைசின் (lentysine) எரிட்டிடைனின் (eritadenin) என்ற வேதிப் பொருட்கள் இரத்தத்தில் கலந்துள்ள ட்ரை கிளிசஸ்ரைடு பாஸ்போலிட் போன்றவற்றை வெகுவாகக் குறைக்கிறது.

இதில் எரிட்டினைன் கொழுப்புப் பொருட்களை எந்தவித பாதிப்பும் இல்லாமல் இரத்தத்திலிருந்து வெளியேற்றி பிற திசுக்களுக்கு அனுப்பி உடலை சமன் செய்கிறது. இவ்வாறு உடலில் அதிகம் தேவையில்லாமல் சேரும் கொழுப்பு கட்டுப்படுகிறது.
இதனால் இரத்தம் சுத்தமடைவதுடன் இதயம் பலப்பட்டு நன்கு சீராக செயல்படுகிறது.

இதயத்தை பாதுகாப்பதில் காளானின் பங்கு அதிகம். பொதுவாக உயர் இரத்த அழுத்தம் ஏற்படும்போது உட்புறச் செல்களில் பொட்டாசியத்தின் அளவு குறையும். வெளிப்புறச் செல்களில் உள்ள சோடியம், உட்புறமுள்ள பொட்டாசியத்திற்கு சமமாக இருக்கும்.  இரத்த அழுத்தத்தின் போது வெளிப்புறத்தில் சோடியம் அதிகரிப்பதால் சமநிலை மாறி உற்புறத்தில் பொட்டாசியத்தின் அளவு குறைகிறது. இதனால் இதயத்தின் செயல்பாடு மாறிவிடுகிறது.

இத்தகைய நிலையைச் சரிசெய்ய பொட்டாசியம் சத்து தேவை. அவை உணவுப்பொருட்களின் மூலம் கிடைப்பது சாலச் சிறந்தது. அந்த வகையில் பொட்டாசியம் சத்து அதிகம் உள்ள உணவு காளான்தான். 100 கிராம் காளானில் பொட்டாசியம் சத்து 447 மி.கி. உள்ளது. சோடியம் 9 மி.கி உள்ளது. எனவே இதயத்தைக் காக்க சிறந்த உணவாக காளான் உள்ளது.

மேலும் காளானில் தாமிரச்சத்து உள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. தாமிரச்சத்து இரத்த நாளங்களில் ஏற்படும் பாதிப்பை சீர்செய்யும். காளான் மூட்டு வாதம் உடையவர்களுக்கு சிறந்த நிவாரணியாகும். மலட்டுத்தன்மை, பெண்களுக்கு உண்டாகும் கருப்பை நோய்கள் போன்றவற்றைக் குணப்படுத்துகிறது.

தினமும் காளான் சூப் அருந்துவதால் பெண்களுக்கு உண்டாகும் மார்பகப் புற்று நோயயை குணப்படுத்த பயன்படுகிறது. 100 கிராம் காளானில் 35 சதவீதம் புரதச்சத்து உள்ளது. மேலும் உடல் வளர்ச்சிக்குத் தேவையான அமினோ அமிலங்கள் உள்ளதால், குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு சிறந்த ஊட்டசத்தாக அமைகிறது.

எளிதில் சீரணமாகும் தன்மைகொண்டது.
மலச்சிக்கலைத் தீர்க்கும் தன்மை கொண்டது.
கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உடல் இளைத்தவர்கள் தினமும் காளான் சூப் அருந்தி வந்தால் விரைவில் உடல் தேறும்.

காளானை முட்டைகோஸ், பச்சைப் பட்டாணியுடன் சேர்த்து சமைத்து அருந்தி வந்தால் வயிற்றுப்புண், ஆசனப்புண் குணமாகும். காளான் தாய்ப்பாலை வற்றவைக்கும் தன்மை கொண்டதால் பாலூட்டும் பெண்கள் காளான் உண்பதைத் தவிர்ப்பது நல்லது.

உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
பகிருங்கள்

அம்மா சமையல்

அம்மா சமையல் என்றால் எனக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே பிடிக்கும். அந்த கை பக்குவம் வேற யாருக்கும் வரவே வராது. இன்னும் என்னோடு எங்க அம்மா சமையல் வாசம் ஒட்டிக் கொண்டிருக்கிறது. தாமிரபரணி தண்ணீர் என்பதால் எங்க அம்மா எதை வைத்துக் கொடுத்தாலும் அந்த சுவையே தனிதான். இங்கு சமையல் குறித்த தகவல்கள் வழங்குவது எல்லாம் சமைக்கத் தெரியாத மற்றும் சதா ஒரே சமையலை செய்து கொடுக்கும் பெண்களுக்காக இந்த பக்கம். எனது பெயர் கமலி.

Leave a Reply

Back to top button