அசைவம்மீன்

கிராமத்து மீன் குழம்பு

Village fish broth

சமைக்க தேவையானவை


  • மீன் – 1/2 கிலோ (உங்களுக்கு பிடித்த மீன்)
  • நல்லெண்ணெய் – 3
  • டேபிள் ஸ்பூன் கடுகு – 1
  • டீஸ்பூன் சின்ன வெங்காயம் – 5
  • பொடியாக நறுக்கியது தக்காளி – 1
  • பொடியாக நறுக்கியது கறிவேப்பிலை
  • சிறிது புளி – 1 சிறிய
  • எலுமிச்சை அளவு உப்பு
  • தேவையான அளவு அரைப்பதற்கு
  • தேங்காய் – 1 கப்
  • சின்ன வெங்காயம் – 10
  • வறுத்து அரைப்பதற்கு.
  • வரமிளகாய் – 8-10
  • மல்லி – 2 டேபிள் ஸ்பூன்
  • சீரகம் – 1 டீஸ்பூன்


செய்முறை


முதலில் புளியை நீரில் 1/2 மணிநேரம் ஊற வைத்து, சாறு எடுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் வறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை வாணலியில் போட்டு வறுத்து, இறக்கி குளிர வைக்க வேண்டும். பிறகு அதனை மிக்ஸியில் போட்டு, தண்ணீர் சிறிது ஊற்றி மென்மையாக பேஸ்ட் செய்து கொள்ளவும்.

பின் அதில் தேங்காய் மற்றும் சின்ன வெங்காயத்தைப் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு பாத்திரத்தில் அந்த பேஸ்ட் மற்றும் புளிச்சாற்றினை சேர்த்து கலந்து தனியாக வைத்துக் கொள்ளுங்கள். அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, பின் வெங்காயம், தக்காளியை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.

பின் அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து, அத்துடன் தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து, நன்கு பச்சை வாசனை போக கொதிக்க விட வேண்டும். குழம்பில் இருந்து எண்ணெய் தனியே பிரியும் போது, அதில் மீன் துண்டுகளை சேர்த்து கிளறி, மீன் நன்கு வெந்து எண்ணெய் பிரியும் போது இறக்கினால், சுவையான கிராமத்து மீன் குழம்பு ரெடி.

உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
பகிருங்கள்

அம்மா சமையல்

அம்மா சமையல் என்றால் எனக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே பிடிக்கும். அந்த கை பக்குவம் வேற யாருக்கும் வரவே வராது. இன்னும் என்னோடு எங்க அம்மா சமையல் வாசம் ஒட்டிக் கொண்டிருக்கிறது. தாமிரபரணி தண்ணீர் என்பதால் எங்க அம்மா எதை வைத்துக் கொடுத்தாலும் அந்த சுவையே தனிதான். இங்கு சமையல் குறித்த தகவல்கள் வழங்குவது எல்லாம் சமைக்கத் தெரியாத மற்றும் சதா ஒரே சமையலை செய்து கொடுக்கும் பெண்களுக்காக இந்த பக்கம். எனது பெயர் கமலி.

Leave a Reply

Back to top button