அசைவம்இறால்

கிரில்டு இறால்

Grilled shrimp

சமைக்க தேவையானவை


  • இறால் – 500 கிராம்
  • பூண்டு – 4-5 பெரியது
  • எலுமிச்சை சாறு – 3 மேசைக்கரண்டி
  • ஆலிவ் எண்ணெய் – 3 மேசைக்கரண்டி
  • அரைத்த மிளகு – 1 தேக்கரண்டி
  • நறுக்கிய கொத்தமல்லி இலை – 2 தேக்கரண்டி
  • உப்பு – சுவைக்கேற்ப


செய்முறை


கொத்தமல்லி இலையை நன்கு பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இறாலை நன்றாக சுத்தம் செய்து அதனுடன், நசுக்கிய பூண்டு, எலுமிச்சை சாறு, ஆலிவ் எண்ணெய், அரைத்த மிளகு மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து கலந்து 30 நிமிடங்கள் ஊற வைக்கவும்.

கிரில்லை சூடாக்கி அனைத்து இறால்களையும் ஒரே லேயராக பெரிய ஆவன்-ப்ரூப் பாத்திரத்தில் வைக்கவும். பாத்திரத்தை கிரில்ன் கீழ் வைக்கவும். இறாலின் ஒரு புறத்தை 2-3 நிமிடங்கள் கிரில் செய்யவும். பாத்திரத்தை வெளியே எடுத்து, இறால்களைத் திருப்பவும். மறுபுறமும் 2-3 நிமிடங்கள் கிரில் செய்யவும். பின் கொத்தமல்லி இலை தூவி இறக்கினால் சுவையான கிரில்டு இறால் ரெடி.

உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
பகிருங்கள்

அம்மா சமையல்

அம்மா சமையல் என்றால் எனக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே பிடிக்கும். அந்த கை பக்குவம் வேற யாருக்கும் வரவே வராது. இன்னும் என்னோடு எங்க அம்மா சமையல் வாசம் ஒட்டிக் கொண்டிருக்கிறது. தாமிரபரணி தண்ணீர் என்பதால் எங்க அம்மா எதை வைத்துக் கொடுத்தாலும் அந்த சுவையே தனிதான். இங்கு சமையல் குறித்த தகவல்கள் வழங்குவது எல்லாம் சமைக்கத் தெரியாத மற்றும் சதா ஒரே சமையலை செய்து கொடுக்கும் பெண்களுக்காக இந்த பக்கம். எனது பெயர் கமலி.

Leave a Reply

Back to top button