
சமைக்க தேவையானவை
- இட்லி – 20
- தாளிக்க சீரகம் – 1 டீஸ்பூன்
- கொத்தமல்லி – சிறிது
- மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
- எண்ணெய் – 1/4 கப்
- ரசப் பொடி – 2 டீஸ்பூன்
- சாம்பார் தூள் – 2 டீஸ்பூன்
- மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
- வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது)
- தக்காளி – 4 (பொடியாக நறுக்கியது)
- உப்பு – தேவையான அளவு
செய்முறை
முதலில் இட்லியை சதுர சதுர துண்டுகளாக்கிக் கொள்ளவும். எண்ணெயில் பொன்னிறமாகப் பொரித்தெடுத்துக் கொள்ளவும். எண்ணெயை சூடாக்கி, சீரகம் தாளிக்கவும்.
பின் வெங்காயம் சேர்த்து வதக்கவும். எல்லா தூள்களையும் சேர்த்து, பின் தக்காளி சேர்க்கவும். உப்புச் சேர்த்து நன்றாக வதக்கிய பின் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும்.
பொரித்து தயாராக வைத்திருக்கும் இட்லியை கடைசி நிமிடத்தில் சேர்த்து ஒரு கொதி கொதித்தபின் கொத்தமல்லி தூவி உடனே பரிமாறவும்.
விருப்பப்பட்டால் இஞ்சி, பூண்டு விழுது 1 டீஸ்பூன் சேர்த்துக் கொள்ளலாம். காலை டிபன் செய்த பிறகு, மீந்துவிட்ட இட்லிகளை மாலை குழந்தைகள் பள்ளியிலிருந்து வரும் முன் கீமா இட்லியாக பண்ணிக் கொடுக்கலாம்.
உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
+1
+1
+1
+1
+1
+1