கீரைசைடீஸ்

கீரை கூட்டு

Lettuce joint

சமைக்க தேவையானவை


  • கீரை – 1 கப் (உங்களுக்கு பிடித்தது)
  • பாசிப் பருப்பு – 4 டேபிள் ஸ்பூன்
  • சின்ன வெங்காயம் – 4-5 (நறுக்கியது)
  • தக்காளி – 1 (நறுக்கியது)
  • மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
  • உப்பு – தேவையான அளவு
  • அரைப்பதற்கு
  • துருவிய தேங்காய் – 1/4 கப்
  • அரிசி மாவு – 1 டீஸ்பூன்
  • தண்ணீர் – தேவையான அளவு
  • எண்ணெய் – 1/2 டேபிள்
  • கடுகு – 1 டீஸ்பூன்
  • உளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன்
  • சீரகம் – 1 டீஸ்பூன்
  • பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை
  • பச்சை மிளகாய் – 1 (நறுக்கியது)


செய்முறை


முதலில் மிக்ஸியில் தேங்காய் மற்றும் அரிசி மாவு சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின்னர் குக்கரில் பாசிப்பருப்பை போட்டு, அதில் மஞ்சள் தூள் மற்றும் தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி 3-4 விசில் விட்டு இறக்கி, விசில் போனதும் குக்கரை திறந்து பருப்பை மசித்துக் கொள்ள வேண்டும்.

பின்பு கீரையை நீரில் ஒருமுறை அலசி, குக்கரில் உள்ள பருப்புடன் சேர்த்து, அடுப்பில் வைத்து கீரையை வேக வைக்க வேண்டும். அதே சமயம், ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, வெங்காயம், தக்காளி சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்கி, பின் குக்கரில் உள்ள கீரையை பருப்புடன் சேர்த்து வாணலியில் ஊற்றி, கொதிக்க விட வேண்டும். பின் அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் பேஸ்ட் மற்றும் உப்பு சேர்த்து நன்கு பச்சை வாசனை போக கொதிக்க வைத்து இறக்கினால், கீரை கூட்டு ரெடி.

உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
பகிருங்கள்

அம்மா சமையல்

அம்மா சமையல் என்றால் எனக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே பிடிக்கும். அந்த கை பக்குவம் வேற யாருக்கும் வரவே வராது. இன்னும் என்னோடு எங்க அம்மா சமையல் வாசம் ஒட்டிக் கொண்டிருக்கிறது. தாமிரபரணி தண்ணீர் என்பதால் எங்க அம்மா எதை வைத்துக் கொடுத்தாலும் அந்த சுவையே தனிதான். இங்கு சமையல் குறித்த தகவல்கள் வழங்குவது எல்லாம் சமைக்கத் தெரியாத மற்றும் சதா ஒரே சமையலை செய்து கொடுக்கும் பெண்களுக்காக இந்த பக்கம். எனது பெயர் கமலி.

Leave a Reply

Back to top button