
சமைக்க தேவையானவை
- அரிசி – இரண்டு டம்ளர்
- பாலக் கீரை – ஒரு கட்டு
- வெந்தயக் கீரை – ஒரு கட்டு
- பொன்னாங்கண்ணிக் கீரை – ஒரு கட்டு
- பருப்பு கீரை – ஒரு கட்டு
- முளைக்கீரை – ஒரு கட்டு
- உருளைக்கிழங்கு – 1
- கேரட் – 1
- பச்சைப் பட்டாணி – ஒரு கைப்பிடி
- நெய் – ஒரு ஸ்பூன்
- எண்ணெய் – 2 ஸ்பூன்
- பச்சை மிளகாய் 5
- கடுகு அரை ஸ்பூன்
- சீரகம் – அரை ஸ்பூன்
- பெருங்காயத்தூள் – அரை ஸ்பூன்
- உப்பு – ஒன்றரை ஸ்பூன்
- புதினா – ஒரு கொத்து
- கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து.
செய்முறை
முதலில் 2 டம்ளர் அரிசியை இரண்டு, முறை நன்றாக கழுவி, தண்ணீர் ஊற்றி, ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் கீரைக் கட்டுகளை பிரித்து, அவற்றை சுத்தம் செய்து, பொடியாக நறுக்கிக் கொள்ளவேண்டும். பிறகு உருளைக்கிழங்கு கேரட் பச்சை மிளகாய் அனைத்தையும் பொடியாக நறுக்க வேண்டும்.
பின்னர் பொடியாக நறுக்கிய கீரைகளை தண்ணீர் விட்டு, இரண்டு மூன்று முறை அலச வேண்டும். பின்னர் தண்ணீர் இல்லாமல் வடிகட்டி வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு ஒரு கடாயை அடுப்பின் மீது வைத்து, நெய் மற்றும் எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் நன்றாக சூடானதும் கடுகு, சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
பிறகு அரை ஸ்பூன் பெருங்காயத்தூள் சேர்த்து விட்டு, அதனுடன் நறுக்கி வைத்துள்ள கீரைகளை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். கீரை அனைத்தும் சுருண்டு வதங்கியதும் அதனுடன் நறுக்கி வைத்த காய்கறிகளை சேர்த்து வதக்க வேண்டும். பிறகு இவற்றுடன் கொத்தமல்லி மற்றும் புதினா தழை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும்.
இவற்றுடன் உப்பு சேர்த்துக் கொண்டால் கீரை தண்ணீர் விட்டு நன்றாக வதங்கி விடும். பின்னர் இரண்டு டம்ளர் அரிசிக்கு 4 டம்ளர் தண்ணீர் ஊற்றி, தண்ணீர் நன்றாக கொதித்ததும் ஊற வைத்துள்ள அரிசியை சேர்த்து கலந்து விட்டு, குக்கரை மூடி, 2 விசில் வரும் வரை வேக வைத்து எடுத்தால் சுவையான கீரை சாதம் தயாராகிவிடும்.