கார பொங்கல்பொங்கல்

குடவாழை அரிசி பொங்கல்

Kudai Vaalai Pongal

சமைக்க தேவையானவை


  • குடவாழை அரிசி – கால் கிலோ
  • கரும்பு வெல்லம் – 200 கிராம்
  • பச்சை பயிறு – 100 கிராம்
  • மாதுளம் பழம் முத்துக்கள் – 100 கிராம்


செய்முறை


கரும்பு வெல்லத்தை பொடித்து கொள்ள வேண்டும். குடவாழை அரிசியை 16 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

பச்சை பயிரை ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பச்சைப் பயிறு, குடவாழை அரிசியை நன்றாக கழுவி குக்கரில் போட்டு 3 டம்ளர் தண்ணீர் ஊற்ற வேண்டும்.

அதனுடன் பொடித்த கரும்பு வெள்ளத்தை சேர்த்து குக்கரை மூடி ஐந்து விசில் வந்தவுடன் இறக்கவும்.

விசில் போனவுடன் மூடியை திறந்து மாதுளம் பழம் முத்துக்களை சேர்த்து கிளறி இறக்கி பரிமாறவும். சூடான சுவையான குடவாழை அரிசி பொங்கல் ரெடி.

உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
பகிருங்கள்

அம்மா சமையல்

அம்மா சமையல் என்றால் எனக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே பிடிக்கும். அந்த கை பக்குவம் வேற யாருக்கும் வரவே வராது. இன்னும் என்னோடு எங்க அம்மா சமையல் வாசம் ஒட்டிக் கொண்டிருக்கிறது. தாமிரபரணி தண்ணீர் என்பதால் எங்க அம்மா எதை வைத்துக் கொடுத்தாலும் அந்த சுவையே தனிதான். இங்கு சமையல் குறித்த தகவல்கள் வழங்குவது எல்லாம் சமைக்கத் தெரியாத மற்றும் சதா ஒரே சமையலை செய்து கொடுக்கும் பெண்களுக்காக இந்த பக்கம். எனது பெயர் கமலி.

Leave a Reply

Back to top button