சிறுதானியங்கள்சைவம்புட்டு

குதிரைவாலி காராமணி புட்டு

சமைக்க தேவையானவை


  • குதிரைவாலி அரிசி 1 கப்
  • காராமணிப் பயறு- 1/4 கப்
  • தேங்காய்ப்பூ- 2 டீஸ்பூன்
  • நெய்- 25 கிராம்
  • வெல்லம்- 200 கிராம்
  • ஏலக்காய்- 5


செய்முறை


முதலில் குதிரைவாலி அரிசியை வெறும் வாணலியில் சிவக்க வறுத்து நைசாகப் பொடித்து சிட்டிகை உப்பு கலந்த நீர் விட்டுப் பிசிறிப் பிசைந்து கட்டிகளின்றி உதிரியாக அழுத்தி மூடிவைக்கவும். சுமார் நாலு மணி நேரம் ஊறிய காராமணிப் பயறை மூழ்கும் வரை நீரில் போட்டுக் குழையாமல் மலர வெந்ததும் இறக்கி நீர்வடித்து உலரவிட்டபின் மிக்சியில் ஒன்றிரண்டாகப் பொடிக்கவும்.

கொதிக்கும் நீரில் வெல்லத்தைக் கரைத்து வடிகட்டிப் பாகுவைக்கவும்.இன்னொரு பர்னரில் குதிரைவாலி மாவை ஆவியில் புட்டாகத் தேங்காய்ப்பூ சேர்த்து வேக வைத்து எடுத்து முதிர்ந்த பாகு ஏலப்பொடி நெய் சேர்த்துக் கிளறவும். விரும்பினால் திராட்சை, முந்திரி நெய்யில் வறுத்துப் போட்டுக் கிளறிப் பரிமாறவும்.

உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
பகிருங்கள்

அம்மா சமையல்

அம்மா சமையல் என்றால் எனக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே பிடிக்கும். அந்த கை பக்குவம் வேற யாருக்கும் வரவே வராது. இன்னும் என்னோடு எங்க அம்மா சமையல் வாசம் ஒட்டிக் கொண்டிருக்கிறது. தாமிரபரணி தண்ணீர் என்பதால் எங்க அம்மா எதை வைத்துக் கொடுத்தாலும் அந்த சுவையே தனிதான். இங்கு சமையல் குறித்த தகவல்கள் வழங்குவது எல்லாம் சமைக்கத் தெரியாத மற்றும் சதா ஒரே சமையலை செய்து கொடுக்கும் பெண்களுக்காக இந்த பக்கம். எனது பெயர் கமலி.

Leave a Reply

Back to top button