குழந்தைகள் உணவுசைவம்பிரியாணிபிரியாணி சைவம்

குழந்தைகளுக்கான ஃகார்ன் பிரியாணி

baby corn biryani

சமைக்க தேவையானவை


  • பாஸ்மதி அரிசி -அரை கிலோ
  • நெய்-50 மில்லி
  • ஏலக்காய் – 2
  • பட்டை – 1
  • பிரிஞ்சி இலை-1
  • கிராம்பு – 2
  • இஞ்சி-பூண்டு விழுது – 1 டேபிள்ஸ்பூன்
  • மல்லித்தூள்(தனியாத்தூள்) – அரை டீஸ்பூன்
  • கொத்தமல்லித்தழை – 50 கிராம்
  • கரம்மசாலா – அரை டீஸ்பூன்
  • புதினா இலை – 50 கிராம்
  • திக்கான தேங்காய்ப் பால் – 2 கப்
  • எண்ணெய் -50 மில்லி
  • மிளகாய்த்தூள் – 1 டேபிள்
  • ஸ்பூன் தண்ணீர் – தேவையான அளவு
  • பொடியாக நறுக்கிய தக்காளி – 150 கிராம்
  • ஃப்ரெஷ் பேபிஃகார்ன் – 15
  • மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்
  • பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் -200 கிராம்
  • பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – 6
  • உப்பு – தேவையான அளவு


செய்முறை


குழந்தைகளுக்கு என்று ஒரு தனி பிரியாணி இருப்பது நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆம், அதுதான் பேபிஃகார்ன் பிரியாணி. உடலுக்கு மிகவும் சத்தான இயற்கையான பிரியாணி ஆகும். சரி வாங்க இதை எப்படிச் செய்வது என்று பார்ப்போம்.

முதலில் பாஸ்மதி அரிசியை 30 நிமிடம் ஊறவைக்கவேண்டும். பின் அடுப்பில் வாய் அகன்ற பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை சேர்த்து சிவக்க வறுக்கவும்.

பிறகு இத்துடன் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். பின்பு இதனுடன் வெங்காயம், பச்சை மிளகாய், பேபிஃகார்ன் சேர்த்து பொன்னிறமாக வதக்கி, தக்காளி சேர்த்து கரையும் வரை வதக்கவும்.

இதில் உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், மல்லித்தூள், கரம்மசாலாத் தூள் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி, ஊற வைத்த பாஸ்மதி அரிசியைச் சேர்க்கவேண்டும்.

பின்னர் இத்துடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஐந்து நிமிடம் வேகவிடவும். நெய் மற்றும் தேங்காய்ப்பால் ஊற்றி கிளறி, கொத்தமல்லித்தழை, புதினா இலை தூவி மூடி போடவும். அடுப்பில் ஒரு பெரிய தோசைக்கல்லை வைத்து தீயை முற்றிலும் குறைத்து அதன் மேல் பிரியாணி பாத்திரத்தை வைத்து, 20 நிமிடம் தம் போட்டு இறக்கிப் பரிமாறவும்.

 

உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
பகிருங்கள்

அம்மா சமையல்

அம்மா சமையல் என்றால் எனக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே பிடிக்கும். அந்த கை பக்குவம் வேற யாருக்கும் வரவே வராது. இன்னும் என்னோடு எங்க அம்மா சமையல் வாசம் ஒட்டிக் கொண்டிருக்கிறது. தாமிரபரணி தண்ணீர் என்பதால் எங்க அம்மா எதை வைத்துக் கொடுத்தாலும் அந்த சுவையே தனிதான். இங்கு சமையல் குறித்த தகவல்கள் வழங்குவது எல்லாம் சமைக்கத் தெரியாத மற்றும் சதா ஒரே சமையலை செய்து கொடுக்கும் பெண்களுக்காக இந்த பக்கம். எனது பெயர் கமலி.

Leave a Reply

Back to top button