குழம்பு

கொண்டைக் கடலை குழம்பு

Konnda Kadalai Kulampu

சமைக்க தேவையானவை


  • காய்ந்த மிளகாய் – 2
  • கருப்பு கொண்டைக் கடலை – 100 கிராம்
  • முந்திரி – 2
  • ஸ்பூன் தேங்காய் துருவல் – 1
  • வெங்காயம் – 1
  • தக்காளி – 2
  • புளி – தேவைக்கு
  • கொத்தமல்லி
  • ஸ்பூன் மிளகாய்த் தூள் – 3
  • கடுகு, கறிவேப்பிலை – சிறிதளவு
  • உப்பு, எண்ணெய் – தேவைக்கு.


செய்முறை


முதலில் ஒரு பாத்திரத்தில் கருப்பு கொண்டைக் கடலையை நான்கு மணி நேரம் ஊறவைத்து. பிறகு உப்பு சேர்த்து குக்கரில் வேகவிடவும். ப்ரஷ்ர்பேனில் எண்ணெய் விட்டு காய்ந்த மிளகாய் தாளித்து,வெங்காயம், தக்காளி வதக்கவும்.

பிறகு உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு வதக்கி வெந்த கொண்டைக்கடலை சேர்த்துஅரை கப் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். குழம்பு நன்கு கொதித்ததும் புளிக்கரைசலைவிடவும். 5 நிமிடம் கழித்து கொதித்ததும் முந்திரி தேங்காய்த் துருவல் அரைத்து விழுது சேர்த்துமீண்டும் கொதிக்கவிட்டு குழம்பு சற்று கெட்டியானதும் கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

கொண்டைக் கடலை குழம்பு செய்ய முதலில் அடுப்பை மிதமான தீயில் வைத்து கொள்ளவேண்டும். பிறகு தேவையான பொருட்களை அதாவது காய்கறிகளை தண்ணீர் கொண்டு அலச வேண்டும். எண்ணெய் மற்றும் உப்பு தேவையான அளவு இருத்தால் சுவையாக இருக்கம்.

உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
பகிருங்கள்
Source
Image

அம்மா சமையல்

அம்மா சமையல் என்றால் எனக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே பிடிக்கும். அந்த கை பக்குவம் வேற யாருக்கும் வரவே வராது. இன்னும் என்னோடு எங்க அம்மா சமையல் வாசம் ஒட்டிக் கொண்டிருக்கிறது. தாமிரபரணி தண்ணீர் என்பதால் எங்க அம்மா எதை வைத்துக் கொடுத்தாலும் அந்த சுவையே தனிதான். இங்கு சமையல் குறித்த தகவல்கள் வழங்குவது எல்லாம் சமைக்கத் தெரியாத மற்றும் சதா ஒரே சமையலை செய்து கொடுக்கும் பெண்களுக்காக இந்த பக்கம். எனது பெயர் கமலி.

Leave a Reply

Back to top button