இனிப்புகொலுக்கட்டை

கேசரி மோதகம்

Saffron collision

சமைக்க தேவையானவை


 • அரிசி மாவு-200 கிராம்
 • ரவை-100 கிராம்
 • தண்ணீர்-150 மில்லி லிட்டர்
 • உப்பு-தேவையான அளவு
 • நெய்-30 கிராம்
 • தேங்காய்-150 கிராம்
 • வெல்லம்-150 கிராம்
 • ஏலக்காய பொடி-1 ஸ்பூன்
 • முந்திரி-தேவையான அளவு
 • உலர்ந்த திராட்சை-தேவையான அளவு
 • குங்குமம் பூ-சிறிது


செய்முறை


அடுப்பில் கடாயை வைத்து அதில் ரவையை சேர்த்து நன்றாக வறுக்க வேண்டும்.வறுத்த பின்னர் தனியாக எடுத்து கொள்ள வேண்டும். பின்னர் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி அதில் அரிசி மாவு,உப்பு, குங்குமப்பூ ஆகியவற்றை சேர்த்து கிளறவும்.

கிளறிய மாவை ஒரு ஈரத்துணியில் 10 நிமிடம் ஊறவைக்கவும்.ஒரு கடாயில் நெய்,அதில் முந்திரி,உலர்ந்த திராட்சை, வெல்லம்,துருவிய தேங்காய்,வறுத்த ரவை ஆகியவை சேர்த்து கிளறவும். பின்பு ஊற வைத்த மாவை கொஞ்சம் எண்ணெய் ஊற்றி சப்பாத்தி மாவு போல் பிசைந்து கொள்ளவும்.

பிசைந்த மாவை தட்டையாக வைத்து அதில் கேசரியை வைத்து விருப்பப்பட்ட வடிவத்தில் செய்து கொள்ள வேண்டும். கடைசியில் இட்லி பாத்திரத்தில் மோதகத்தை வைத்து 10 நிமிடம் வேக வைக்கவும்.சூடான.சுவையான. கேசரி மோதகம் ரெடி.

உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

பகிருங்கள்

அம்மா சமையல்

அம்மா சமையல் என்றால் எனக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே பிடிக்கும். அந்த கை பக்குவம் வேற யாருக்கும் வரவே வராது. இன்னும் என்னோடு எங்க அம்மா சமையல் வாசம் ஒட்டிக் கொண்டிருக்கிறது. தாமிரபரணி தண்ணீர் என்பதால் எங்க அம்மா எதை வைத்துக் கொடுத்தாலும் அந்த சுவையே தனிதான். இங்கு சமையல் குறித்த தகவல்கள் வழங்குவது எல்லாம் சமைக்கத் தெரியாத மற்றும் சதா ஒரே சமையலை செய்து கொடுக்கும் பெண்களுக்காக இந்த பக்கம். எனது பெயர் கமலி.

Leave a Reply

Your email address will not be published.

Back to top button