
சமைக்க தேவையானவை
- கானாங்ககெளுத்தி மீன் – அரை கிலோ
- எலுமிச்சை சாறு – ஒரு டீஸ்பூன்
- மிளகாய்பொடி – ஒரு டேபிள்ஸ்பூன்
- மஞ்சள் பொடி – ஒரு டீஸ்பூன்
- இஞ்சி – அரை இஞ்ச் துண்டு
- பூண்டு – மூன்று பல்
- பச்சைமிளகாய் – 1
- சின்ன வெங்காயம் – 6
- கருவேப்பிலை – 5,6 இலைகள்
- உப்பு தேவையான அளவு
- தேங்காய் எண்ணை – வறுக்க
- சோம்பு சிறிதளவு
செய்முறை
மீனை சுத்தம் செய்து மேலே கீறி விடவும். மேலே சொன்ன எல்லா பொருடகளையும் (மீனை தவிர) நைசாக அரைத்துக் கொள்ளவும். அரைத்த மசாலாவை மீனின் கீறல்களில் படும்மாறு மேலும், உள்ளும் தேய்க்கவும். பிறகு இதை அரை மணிநேரம் பிரிட்ஜில் அல்லது வெளியில் மசாலாவில ஊற வைக்கவும்.
ஃபிரையிங் பேனை தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானவுடன் மீனை பொரித்து எடுக்கவும். எலுமிச்சை துண்டுகளை சேர்த்து பறிமாறவும். செய்து பார்த்து உங்கள் விமர்சனங்களை இங்கே தெரியப்படுத்தவும்.
உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
+1
+1
+1
+1
+1
+1