
சமைக்க தேவையானவை
- மைதா – 3(நறுக்கியது)
- சீனி – 1 கப்
- பால் – 1 தேக்கரண்டி
- நல்லெண்ணெய் – 1 மேஜைக்கரண்டி
- உப்பு, சோடா உப்பு – சிறிது
செய்முறை
முதலில் மைதாவை சலித்துக் கொள்ளுங்கள். அதில் உப்பு, சோடா உப்புவை கலந்து கொள்ளுங்கள். சீனியை பாலில் கரைத்துக் கொள்ளுங்கள். மாவில் சிறிது, சிறிதாக பாலை ஊற்றி சப்பாத்தி மாவு பதத்துக்கு பிசைந்து எலுமிச்சை அளவுக்கு உருட்டிக் கொள்ளுங்கள்.
ஒரு அகன்ற பாத்திரத்தில் எண்ணெயை ஊற்றி உருட்டிய மாவை அதில் நனைத்தெடுத்து ஒருமணி நேரம் ஊற வையுங்கள். பின் அகலமான தட்டை திருப்பிப்போட்டு மாவை முழுதும் பரப்பி சப்பாத்திக் கட்டையால் தேய்த்துக் கொள்ளுங்கள்.
தட்டு முழுதும் பரவியவுடன் எடுத்து நான்கைந்தாகச் சுற்றி மீண்டும் சப்பாத்திக் கட்டையால் தேய்த்துக் கொள்ளுங்கள். வாணலியில் எண்ணெய் ஊற்றி மிதமான சூட்டில் தனித்தனியாக போட்டு பொரித்தெடுங்கள். வெந்ததும், இரு கைகளாலும் பரோட்டாவை உள்நோக்கி தட்டினால் மிருதுவாகும்.
உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
+1
+1
+1
+1
+1
+1