
சமைக்க தேவையானவை
- அரிசி புட்டு மாவு – 500 கிராம்
- தண்ணீர் – தேவையான அளவு
- தேங்காய் துருவல் – 100 கிராம்
- தண்ணீர் – தேவையான அளவு
- சர்க்கரை – தேவையான அளவு
செய்முறை
முதலில் ஒரு அகண்ட கிண்ணத்தில் அரிசி மாவை எடுத்து கொள்ள வேண்டும்.அதில் தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து கட்டிகள் வராதவாறு நன்றாக கிளறவும். பின்னர் தேங்காவை துருவி கொள்ளவும். அடுத்து புட்டு குழலை எடுத்துஎடுத்து பிசைந்து வைத்த மாவு,துருவிய தேங்காய் என்று மாற்றி மாற்றி நிரப்பி கொள்ளவும்.
குழலில் போடப்பட்ட புட்டை குறைந்தபட்சம் 10 நிமிடம் வேக வைக்கலாம். பிறகு ஒரு தட்டில் வாழை இலை வைத்து அதில் புட்டுவை வைத்து அதனுடன் சர்க்கரை கலந்து சூடாக பரிமாறவும். இதற்கு சைட் டிஷ் ஆகா கடலை தொக்கு செய்து இரண்டையும் ஒன்றாக சேர்த்து சாப்பிட்டால் சுவை அள்ளும்.
முக்கிய குறிப்பு: துருவிய தேங்காவை குழலின் மேல் பாகம் மற்றும் அடி பாகத்தில் கட்டாயமாக நிரப்பி கொள்ளவும்.அப்பொழுது தான் புட்டு உடையாமல் வரும்.
உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
+1
+1
1
+1
+1
+1
+1