
சமைக்க தேவையானவை
- கேரளா மட்டை அரிசி – 1/8 கப்
- பால் – 4 கப்
- சர்க்கரை – 1 கப்
- ஏலக்காய் பொடி – 1/4 டீஸ்பூன்
- உப்பு – ஒரு சிட்டிகை
செய்முறை
முதலில் கேரளா மட்டை அரிசியை மிக்ஸர் ஜாரில் போட்டு கொரகொரவென்று அரைத்து கொள்ளுங்கள். பின் அதை நீரில் நன்கு கழுவி, நீரை வடிகட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி, கொதிக்க ஆரம்பித்ததும், தீயைக் குறைத்து 5 நிமிடம் கொதிக்க வைக்கவும்.
பிறகு அதில் கழுவி வைத்துள்ள மட்டை அரிசியைப் போட்டு நன்கு கிளறி, அரிசி நன்கு மென்மையாக வேகும் வரை வேக வைக்கவும். அரிசி வேக சிறிது நேரம் எடுக்கும் என்பதால், குறைவான தீயில் வேக வைக்கவும்.
அரிசி நன்கு மென்மையாக வெந்த பின்பு சர்க்கரையை சேர்த்து நன்கு கிளறி விடுங்கள். இறுதியில் உப்பு மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான கேரளா மட்டை அரிசி பால் பாயாசம் தயார்.
உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
+1
+1
+1
+1
+1
+1