
சமைக்க தேவையானவை
- பாஸ்மதி அரிசி – ஒரு கிலோ
- கோழி அல்லது ஆட்டுக்கறி – ஒரு கிலோ
- பட்டை ,கிராம்பு , ஏலக்காய் – தேவையான அளவு
- அன்னாசி பழம் – 250 கிராம்
- மஞ்சள் தூள் – இரண்டு தே கரண்டி
- பச்சை மிளகாய் – 10 எண்ணம்
- பிரியாணி மசாலா – 50 கிராம்
- தக்காளி – அரைக்கிலோ
- டால்டா – 250 கிராம்
- உலர் திராட்சை – 100 கிராம்
- இஞ்சி பூண்டு விழுது – 100 கிராம்
- தேங்காய் எண்ணெய் – 100 கிராம்
- முந்திரி பருப்பு – 100 கிராம்
- தயிர் – 100 கிராம்
- வெங்காயம் – ஒரு கிலோ
- மல்லித்தளை மற்றும் புதினா – தேவையான அளவு
- பிரியாணி வாசனைத் திரவிய ம்- தேவையான அளவு
- பிரியாணி கலர் போடி – தேவையான அளவு
- உப்பு – தேவையான அளவு
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணையை ஊற்றவும், பிறகு நறுக்கிய பெரிய வெங்காயத்தை போடவும். வெங்காயம் நாற்றாக வதங்கிய உடன் பச்சை மிளகாவை போடவும் மீண்டும் வெங்காயம் வதங்கியவுடன் அதில் மஞ்சள் பொடியை போடவும் பிறகு நறுக்கி கழுவி வைத்த இறைச்சியை பொட்டு நன்றாக கிளக்கவும் இறைச்சி வெங்காயத்துடன் வதங்கி வரும் பொழுது நறுக்கிய தக்காளியை போடவும்.
பிறகு அரைத்த இஞ்சி ,பூண்டை போடவும் பிறகு சிறிது உப்பு சேர்த்து நன்றாக இளக்கவும் பிறகு பிரியாணி மசாலாவை போட்டு மீண்டும் நன்றாக இளக்கவும்பிறகு சிறிதுதயிரை ஊற்றவும் ,பிறகு மசாலாவும் இறைச்சியும் ஒன்று சேர்ந்து வெந்தவுடன் அதை இறக்கி வைக்கவும்.
பிரியாணி மசாலா ரெடி ஒரு காலியான பெரிய பாத்திரத்தை எடுக்கவும் அதில் முதலில் இறைச்சி மசாலாவின் கொஞ்சப் பகுதியை போடவும் பிறகு வடித்த பாஸ்மதி சோற்றின் அரைப்பங்கை போடவும் அதை மேலோட்டமாக சமப்படுத்தவும்.
பிறகு பிரியாணி கலர் பொடியை சிறுது தண்ணீரில் கலக்கி அதன் மேல் சிறிதாய் தொளிக்கவும். பிறகு மல்லி ,புதினா ,மற்றும் முந்திரி வதக்கிய வெங்காயம் .மற்றும் அன்னாசி பழத்தையும் போட்டு பிறகு இளகிய அரை டால்டாவை சுற்றி ஊற்றவும் பிறகு இரண்டாம் நிலைக்கு வந்து மீதியுள்ள மசாலா சோர் மற்றும் எல்லாப்பொருட்களையும் முதலில் செய்த போல் மறுபடியும் செய்யவும்.
இறுதியாக பிரியாணி வாசனை திரவியத்தை எல்லா பக்கமும் தொளிக்கவும் பிறகு ஒரு நல்ல மூடியிட்டு மூடி அப்பாத்திரத்தை அடுப்பில் ஏற்றி சிறிய அளவு தீ இடவும் 5 நிமிடத்திற்கு பிறகு வாசனைத்திரவியம் சூடாக்கி வாசம் வந்தவுடன் தீயை அணைக்கவும்.
அரை மணிநேரம் கழித்து மூடியைத் திறந்து ஒரு பாகமாக கரண்டியால் பிரியாணியை எடுத்து சாப்பிடும் பாத்திரத்தில் பரிமாறவும். சுவையான கேரளா ஸ்பெஷல் பிரியாணி தயார்.