இனிப்புபாயாசம்

கேரளா ஸ்டைல் பலாப்பழ பாயாசம்

Kerala Style Palappala Payasam

சமைக்க தேவையானவை


  • கனிந்த பலாப்பழ துண்டுகள் – 12
  • வெல்லம் – 1/2 கப்
  • தண்ணீர் 1/4 கப்
  • கெட்டியாக தேங்காய் பால் – 3/4 கப்
  • நெய் – 3 டீஸ்பூன்
  • முந்திரி – சிறிது
  • பொடியாக நறுக்கிய தேங்காய் துண்டுகள் – 1 டேபிள் ஸ்பூன்
  • ஏலக்காய் பொடி – 1 சிட்டிகை


செய்முறை


முதலில் பலாப்பழத்தை குக்கரில் போட்டு, அது மூழ்கும் அளவில் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும். பின் குக்கரைத் திறந்து, நீரை வடிகட்டிவிட்டு, மிக்சர் ஜாரில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும். அதே சமயம் வெல்லத்தை நீரில் போட்டு கரைத்து வடிகட்டிக் கொள்ள வேண்டும்.

அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் ஒரு டீஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும், முந்திரி மற்றும் தேங்காய் துண்டுகளை சேர்த்து பொன்னிறமாக வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு அந்த வாணலியில் வெல்ல நீரை ஊற்றி, 5 நிமிடம் கொதிக்க விட்டு, பின் அரைத்து வைத்துள்ள பலாப்பழ விழுதை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

பாயாசமானது ஓரளவு கெட்டியாக ஆரம்பிக்கும் போது, அதில் மீதமுள்ள நெய் மற்றும் தேங்காய் பாலை ஊற்றி ஒருமுறை கிளறி இறக்கி விட வேண்டும். இறுதியாக அதில் வறுத்த முந்திரி, தேங்காய் துண்டுகள் மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து கிளறினால், சுவையான கேரளா ஸ்டைல் பலாப்பழ பாயாசம் தயார்.

குறிப்பு: விருப்பமுள்ளவர்கள் தேங்காய் பால் பாதியும், காய்ச்சிய பால் பாதியையும் சேர்த்துக் கொள்ளலாம். தேங்காய் பால் சேர்த்ததும் கொதிக்க வைக்கக்கூடாது. இல்லாவிட்டால் பாயாசம் திரிய ஆரம்பித்துவிடும். பாயாசத்தின் சுவையை இன்னும் அதிகரிக்க நினைத்தால், அதிகமாக நெய் சேர்த்துக் கொள்ளுங்கள்.

உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
பகிருங்கள்

அம்மா சமையல்

அம்மா சமையல் என்றால் எனக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே பிடிக்கும். அந்த கை பக்குவம் வேற யாருக்கும் வரவே வராது. இன்னும் என்னோடு எங்க அம்மா சமையல் வாசம் ஒட்டிக் கொண்டிருக்கிறது. தாமிரபரணி தண்ணீர் என்பதால் எங்க அம்மா எதை வைத்துக் கொடுத்தாலும் அந்த சுவையே தனிதான். இங்கு சமையல் குறித்த தகவல்கள் வழங்குவது எல்லாம் சமைக்கத் தெரியாத மற்றும் சதா ஒரே சமையலை செய்து கொடுக்கும் பெண்களுக்காக இந்த பக்கம். எனது பெயர் கமலி.

Leave a Reply

Back to top button