இனிப்புஸ்வீட்

கேழ்வரகு இனிப்பு தட்டை

Cardamom dessert plate

சமைக்க தேவையானவை


  • ராகி மாவு – 1 கப்
  • பொரிகடலை மாவு – ½ கப்
  • வெல்லம் – ½ கப்
  • ஏலக்காய்த் தூள் – 1 தேக்கரண்டி
  • தேங்காய் துருவல் – 2 தேக்கரண்டி
  • வெள்ளை எள்ளு – 2 தேக்கரண்டி
  • எண்ணெய் – பொறிக்கத் தேவையான அளவு


செய்முறை


முதலில் ராகி மாவை வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ளவும். ராகி மற்றும் பொரிகடலை மாவை நன்றாக சலித்துக் கொள்ளவும்.வெல்லத்தை ½ கப் தன்ணீரில் கரைத்து வடிகட்டி, குமிழ்ப் பதத்தில் பாகு காய்ச்சிக் கொள்ளவும். சலித்த மாவுடன் தேங்காய்த் துருவல், எள்ளு மற்றும் ஏலக்காய்த் தூள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

இத்துடன் வெல்லப் பாகை சிறிது சிறிதாகக் கலந்து சப்பாத்தி மாவுப் பதத்தில் பிசைந்து கொள்ளவும். பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, பின் மிக மெல்லிய தட்டைகளாகத் தட்டி வைத்துக் கொள்ளவும்.

ஒரு அகலமான வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் தீயைக் குறைத்து மிதமான சூட்டில் தட்டைகளை போட்டு பொரித்தெடுக்கவும். சத்தான, சுவையான ராகி இனிப்பு தட்டை ரெடி.

உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
பகிருங்கள்

அம்மா சமையல்

அம்மா சமையல் என்றால் எனக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே பிடிக்கும். அந்த கை பக்குவம் வேற யாருக்கும் வரவே வராது. இன்னும் என்னோடு எங்க அம்மா சமையல் வாசம் ஒட்டிக் கொண்டிருக்கிறது. தாமிரபரணி தண்ணீர் என்பதால் எங்க அம்மா எதை வைத்துக் கொடுத்தாலும் அந்த சுவையே தனிதான். இங்கு சமையல் குறித்த தகவல்கள் வழங்குவது எல்லாம் சமைக்கத் தெரியாத மற்றும் சதா ஒரே சமையலை செய்து கொடுக்கும் பெண்களுக்காக இந்த பக்கம். எனது பெயர் கமலி.

Leave a Reply

Back to top button