உப்புமாசைவம்

கேழ்வரகு காய்கறி உப்புமா

Is cashew vegetable salty

சமைக்க தேவையானவை


  • கேழ்வரகு மாவு – 1 கப்
  • கேரட் – 50 கிராம்
  • பீன்ஸ் – 50 கிராம்
  • உருளைகிழங்கு – 50 கிராம்
  • வெங்காயம் – 50 கிராம்
  • மிளகாய் – 4
  • உப்பு – தேவையான அளவு
  • கறிவேப்பிலை – சிறிதளவு
  • தாளிக்க
  • கடுகு, உளுந்தம் பருப்பு, எண்ணெய்


செய்முறை


வெங்காயம், ப.மிளகாய், கேரட், பீன்ஸ், கொத்த மல்லி, உருளைக் கிழங்கை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். அடுப்பில் கடாய் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை  ப.மிளகாய் போட்டு தாளித்த பின் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் காய்கறிகளை போட்டு சிறிது நேரம் வதக்கிய பின் சிறிது தண்ணீர் ஊற்றி அதில் உப்பு சேர்த்து காய்கறிகளை வேக வைக்கவும். காய்கறிகள் வெந்தவுடன் அதில் கேழ்வரகு மாவை சிறிது சிறிதாக கொட்டி கைவிடாமல் கிளற வேண்டும். தண்ணீர் வற்றி கொட்டியான பதம் வந்ததும் கொத்த மல்லி தழை தூவி இறக்கவும். சத்தான கேழ்வரகு – காய்கறி உப்புமா ரெடி.

உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
பகிருங்கள்

அம்மா சமையல்

அம்மா சமையல் என்றால் எனக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே பிடிக்கும். அந்த கை பக்குவம் வேற யாருக்கும் வரவே வராது. இன்னும் என்னோடு எங்க அம்மா சமையல் வாசம் ஒட்டிக் கொண்டிருக்கிறது. தாமிரபரணி தண்ணீர் என்பதால் எங்க அம்மா எதை வைத்துக் கொடுத்தாலும் அந்த சுவையே தனிதான். இங்கு சமையல் குறித்த தகவல்கள் வழங்குவது எல்லாம் சமைக்கத் தெரியாத மற்றும் சதா ஒரே சமையலை செய்து கொடுக்கும் பெண்களுக்காக இந்த பக்கம். எனது பெயர் கமலி.

Leave a Reply

Back to top button