
சமைக்க தேவையானவை
- கேழ்வரகு – 1/4 கிலோ
- முருங்கைக் கீரை – கைப்பிடியளவு
- பச்சரிசி – கால் கப்
- உளுத்தம்பருப்பு – கைப்பிடியளவு
- எண்ணெய் – தேவையான அளவு
- உப்பு – தேவையான அளவு
செய்முறை
முதலில் கேழ்வரகு, பச்சரிசி, உளுத்தம்பருப்பு ஒவ்வொன்றையும் தனித்தனியாக இரண்டரை மணி நேரம் ஊற வைத்து கொள்ளவும்.
பிறகு அதனை தனித்தனியாக நன்றாக அரைத்துக் கொள்ளவேண்டும் .
அந்த மாவை ஐந்து மணி நேரம் புளிக்க வைக்கவும். அதனை பிறகு ஒன்றாக முருங்கைக் கீரை, உப்பு சேர்த்து, நன்கு மாவை கலக்கவும்.
தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடாக்கி, எண்ணெய் தேய்த்து, கனமான தோசையாக ஊற்றவும். இருபுறமும் எண்ணெய் விட்டு தோசை வெந்ததும் எடுக்கவும்.
உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
+1
+1
+1
+1
+1
+1