
சமைக்க தேவையானவை
- கேழ்வரகு மாவு – 2 கப்,
- அரிசிமாவு – கால் கப்
- பொட்டுக்கடலை மாவு – அரை கப்,
- மிளகாய்த்தூள், பூண்டு விழுது – தலா ஒரு டீஸ்பூன்,
- பெருங்காயத்தூள், சோம்புத்தூள் – தலா கால் டீஸ்பூன்,
- உப்பு, எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை
ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு மாவு, பொட்டுக்கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய் தூள், பூண்டு விழுது, பெருங்காயத்தூள், சோம்புத்தூள், உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, முறுக்கு மாவு பதத்தில் கலந்துகொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் நெருப்பை சிம்மில் வைத்துக்கொள்ளவும். முறுக்குக் குழாயில் ரிப்பன் அச்சுப் போட்டு மாவை முறுக்கு அச்சில் வைத்து காய்ந்த எண்ணெயில் ரிப்பன்களாகப் பிழியவும். சிவந்தது வெந்ததும் எடுக்கவும். கேழ்வரகு ரிப்பன் முறுக்கு தயார்.
உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
+1
+1
+1
+1
+1
+1