இட்லிசைவம்

கொத்துமல்லி இட்லி

coriander idli

சமைக்க தேவையானவை


  • இட்லி மாவு – 2 கப்
  • உளுத்தம்பருப்பு – 2 டீஸ்பூன்
  • எண்ணெய் – 2 டீஸ்பூன்தாளிக்க

     

  • கடுகு – அரை டீஸ்பூன்
  • புளி – சிறிய உருண்டை
  • உப்பு – தேவையான அளவு
  • தேங்காய் துருவல் – ஒரு டீஸ்பூன்
  • பச்சை மிளகாய் – 4
  • கறிவேப்பிலை – சிறிதளவுஅரைக்க

     

  • மல்லித்தழை – ஒரு கட்டு


செய்முறை


முதலில் இட்லி மாவைக் கொண்டு இட்லிகளாக ஊற்றி எடுத்துக் கொள்ளுங்கள். மல்லித்தழை, கறிவேப்பிலையை சுத்தம் செய்யுங்கள்.

எண்ணெயைக் காயவைத்து தேங்காய், மிளகாய், புளி, கொத்துமல்லி, கறிவேப்பிலை சேர்த்து வதக்கி நன்கு அரைத்தெடுங்கள். எண்ணெயைக் காயவைத்து தாளிக்கும் பொருட்களைப் போட்டு, அதை வறுத்து அரைத்த விழுதுடன் சேர்த்து சற்று தளதளவென்று கரைத்துக்கொள்ளுங்கள்.

அதனுடன் இட்லிகளை சேர்த்து நன்கு கலந்து பரிமாறுங்கள். பிரமாதமான சுவையும் மணமும், இட்லிகளை நிமிடத்தில் காலி செய்ய வைக்கும்.

உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
பகிருங்கள்
Source
Image

அம்மா சமையல்

அம்மா சமையல் என்றால் எனக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே பிடிக்கும். அந்த கை பக்குவம் வேற யாருக்கும் வரவே வராது. இன்னும் என்னோடு எங்க அம்மா சமையல் வாசம் ஒட்டிக் கொண்டிருக்கிறது. தாமிரபரணி தண்ணீர் என்பதால் எங்க அம்மா எதை வைத்துக் கொடுத்தாலும் அந்த சுவையே தனிதான். இங்கு சமையல் குறித்த தகவல்கள் வழங்குவது எல்லாம் சமைக்கத் தெரியாத மற்றும் சதா ஒரே சமையலை செய்து கொடுக்கும் பெண்களுக்காக இந்த பக்கம். எனது பெயர் கமலி.

Leave a Reply

Back to top button