
சமைக்க தேவையானவை
- கொள்ளு – 3 டீஸ்பூன்
- பூண்டு – 20 பற்கள்
- பெரிய தக்காளி – 1 (நறுக்கியது)
- புளி – ஒரு எலுமிச்சைப்பழ அளவு
- தனியா – 1 டீஸ்பூன்
- காய்ந்த மிளகாய் – 7 அல்லது 8
- பெரிய வெங்காயம் – 1 (நறுக்கியது)
- நல்லெண்ணெய் – 6 டீஸ்பூன்
- வெந்தயம் – 1 டீஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு.
- பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை
செய்முறை
முதலில் புளியை தண்ணீர் விட்டு கெட்டியாகக் கரைத்துக் கொள்ளவேண்டும். அடுப்பில் வெறும் கடாயில் கொள்ளை போட்டு வாசனை வரும்வரை வறுத்து தனியே வைக்கவும். பின்பு அதே கடாயில் 1 டீஸ்பூன் நல்லெண்ணெயை ஊற்றி தனியா, வெந்தயம், காய்ந்த மிளகாய், பூண்டு 5 பற்கள் போட்டு வறுத்துக் கொள்ளவும்.
ஆறியதும் இத்துடன் வறுத்த கொள்ளு சேர்த்து மிக்சியில் சிறிது தண்ணீர் ஊற்றி நைசாக அரைத்துக் கொள்ளவும்.கடாயில் 4 டீஸ்பூன் நல்லெண்ணெயை ஊற்றி காய்ந்ததும் கடுகு, பெருங்காயத்தூள் தாளித்து, மீதியிருக்கும் பூண்டைப் போட்டு வதக்கவும். வெங்காயம், தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.
பின் புளிக்கரைசல், அரைத்த மசாலா கலவை, உப்பு போட்டு கலந்து கொதிக்க விடவும். நன்கு கொதித்ததும் இறக்கும் முன்பு 1 டீஸ்பூன் நல்லெண்ணெயை சுழற்றி ஊற்றி இறக்கவும். கமகமக்கும் கொள்ளு பூண்டு குழம்பை சாதத்துடன் பரிமாறவும்.