பாயாசம்ஸ்வீட்

கோதுமை ரவை பாயாசம்

Wheat semolina powder

சமைக்க தேவையானவை


  • நெய் – 1 டேபிள் ஸ்பூன் + 2 டேபிள் ஸ்பூன்
  • கோதுமை ரவை – 1/2 கப்
  • ஜவ்வரிசி – 1/4 கப்
  • தண்ணீர் – 1.5 கப்
  • வெல்லம் – 1 கப்
  • தேங்காய் பால் – 2 கப்
  • ஏலக்காய் பொடி – 1 டீஸ்பூன்
  • முந்திரி – 10


செய்முறை


முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும், கோதுமை ரவையைப் போட்டு 2 நிமிடம் வறுத்து இறக்கிக் கொள்ளவும். பின் ஒரு குக்கரில் வறுத்த கோதுமை ரவை, ஜவ்வரிசி மற்றும் நீரை ஊற்றி, அடுப்பில் வைத்து குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.

விசில் போனதும், ஒரு வாணலியில் வேக வைத்துள்ள கோதுமை ரவையை ஊற்றி, அதில் வெல்லத்தைப் போட்டு அடுப்பில் வைத்து, 5-10 நிமிடம் நன்கு கெட்டியாகும் வரை கொதிக்கவிடவும். பின்பு அதில் தேங்காய் பாலை ஊற்றி சில நிமிடங்கள் கொதிக்க வைத்து, பின் ஏலக்காய் பொடியைத் தூவி கிளறி இறக்கவும்.

இறுதியில் மற்றொரு சிறு வாணலியில் நெய் ஊற்றி அடுப்பில் வைத்து சூடானதும், அதில் முந்திரியைப் போட்டு பொன்னிறமாக வறுத்து, பாயாசத்தில் ஊற்றி கிளறினால், சுவையான கோதுமை ரவை பாயாசம் தயார்.

உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

பகிருங்கள்

அம்மா சமையல்

அம்மா சமையல் என்றால் எனக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே பிடிக்கும். அந்த கை பக்குவம் வேற யாருக்கும் வரவே வராது. இன்னும் என்னோடு எங்க அம்மா சமையல் வாசம் ஒட்டிக் கொண்டிருக்கிறது. தாமிரபரணி தண்ணீர் என்பதால் எங்க அம்மா எதை வைத்துக் கொடுத்தாலும் அந்த சுவையே தனிதான். இங்கு சமையல் குறித்த தகவல்கள் வழங்குவது எல்லாம் சமைக்கத் தெரியாத மற்றும் சதா ஒரே சமையலை செய்து கொடுக்கும் பெண்களுக்காக இந்த பக்கம். எனது பெயர் கமலி.

Leave a Reply

Your email address will not be published.

Back to top button