
சமைக்க தேவையானவை
- கோதுமை ரவை – ஒரு கப்
- வேக வைத்த பாசிப்பருப்பு – கால் கப்
- மிளகு – அரை டேபிள் ஸ்பூன்
- சீரகம் – அரை டேபிள் ஸ்பூன்
- வறுத்த முந்திரி – 8
- பட்டாணி – 1 டேபிள் ஸ்பூன்
- கேரட் துருவல் – 2 டேபிள் ஸ்பூன்
- நெய் – 4 டேபிள் ஸ்பூன்
- இஞ்சி – ஒரு துண்டு (பொடியாக நறுக்கவும்)
- உப்பு – தேவையான அளவு
செய்முறை
கடாயில் கொஞ்சம் நெய் விட்டு கோதுமை ரவையை வறுத்து, தண்ணீர் சேர்த்து வேக விடவும். அதனுடன் வேக வைத்த பாசிப்பருப்பு, உப்பு சேர்த்துக் கிளறவும்.
இன்னொரு கடாயில் சிறிது நெய் விட்டு… சீரகம், மிளகு போட்டு வறுக்கவும். பிறகு, பட்டாணி, இஞ்சி, கேரட் துருவல், முந்திரிப் பருப்பு போட்டு வதக்கி, கோதுமை கலவையில் கலந்து, மீதமுள்ள நெய் சேர்த்துக் கலந்து இறக்கவும்.
உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
+1
+1
+1
+1
+1
+1