சைவம்தோசை

கோதுமை வெங்காய தோசை

wheat onion dosa

சமைக்க தேவையானவை


  • கோதுமை மாவு – ஒரு கப்
  • சீரகம் – ஒரு டீஸ்பூன்
  • கறிவேப்பிலை பொடி, புதினா பொடி – தலா அரை டீஸ்பூன்
  • பொடியாக நறுக்கிய வெங்காயம் – 1
  • பச்சை மிளகாய் – 3 (பொடியாக நறுக்கியது)
  • எண்ணெய் – தேவையான அளவு
  • உப்பு – தேவையான அளவு


செய்முறை


ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை பொடி, புதினா பொடி, சீரகம், உப்பு எல்லா பொருட்களையும் போட்டு, தண்ணீர் விட்டு தோசை மாவை பதத்தில் கரைத்து, சிறிது நேரம் வைத்திருக்கவும்.

தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடாக்கி, ஒரு கரண்டி மாவு எடுத்து சிறிது கல்லில் கனமாக விட்டு, இருபுறமும் எண்ணெய் ஊற்றி தோசை வெந்தவுடன் எடுத்து பரிமாறவும்.

உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
பகிருங்கள்

அம்மா சமையல்

அம்மா சமையல் என்றால் எனக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே பிடிக்கும். அந்த கை பக்குவம் வேற யாருக்கும் வரவே வராது. இன்னும் என்னோடு எங்க அம்மா சமையல் வாசம் ஒட்டிக் கொண்டிருக்கிறது. தாமிரபரணி தண்ணீர் என்பதால் எங்க அம்மா எதை வைத்துக் கொடுத்தாலும் அந்த சுவையே தனிதான். இங்கு சமையல் குறித்த தகவல்கள் வழங்குவது எல்லாம் சமைக்கத் தெரியாத மற்றும் சதா ஒரே சமையலை செய்து கொடுக்கும் பெண்களுக்காக இந்த பக்கம். எனது பெயர் கமலி.

Leave a Reply

Back to top button