அசைவ சூப்சூப்

கோழி முட்டை சூப்

chicken egg soup

சமைக்க தேவையானவை


 • கோழி (எலும்புடன்) – கால் கிலோ
 • முட்டை – ஒன்று
 • காரட், பீன்ஸ் – கால் கப்
 • வெங்காயம் – ஒன்று
 • தக்காளி – ஒன்று
 • பச்சை மிளகாய் – 2
 • பூண்டு – 2 பல்
 • இஞ்சி, பூண்டு விழுது – ஒரு தேக்கரண்டி
 • வெள்ளை மிளகுத் தூள் – அரை தேக்கரண்டி
 • சோம்பு தூள் – கால் தேக்கரண்டி
 • புதினா – சிறிது
 • பாதாம் தூள் (அ) விழுது – 2 மேசைக்கரண்டி
 • எண்ணெய், உப்பு – தேவைக்கேற்ப


செய்முறை


முதலில் காய்கறிகளை சுத்தம் செய்து துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். நறுக்கிய காய்கறிகளுடன், நறுக்கிய தக்காளி, ஒரு பச்சை மிளகாய், சுத்தம் செய்த கோழி சேர்த்து தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் ஊற்றி 10 நிமிடம் வரை வேக விடவும்.

பின்பு பாதாம் தூள் சேர்த்து கொதிக்க விடவும். தவாவில் எண்ணெய் ஊற்றி நசுக்கிய பூண்டு, மீதமுள்ள பச்சை மிளகாய், நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமானதும், இஞ்சி, பூண்டு விழுது, சோம்பு தூள் சேர்த்து வதக்கவும்.

தாளித்தவற்றை சூப் கலவையில் சேர்த்து ஒரு கொதி விட்டு, முட்டையை உடைத்து ஊற்றவும். புதினா, வெள்ளை மிளகுத் தூள் சேர்த்து சூடாக பரிமாறவும்.

உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

பகிருங்கள்
Source
Image

அம்மா சமையல்

அம்மா சமையல் என்றால் எனக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே பிடிக்கும். அந்த கை பக்குவம் வேற யாருக்கும் வரவே வராது. இன்னும் என்னோடு எங்க அம்மா சமையல் வாசம் ஒட்டிக் கொண்டிருக்கிறது. தாமிரபரணி தண்ணீர் என்பதால் எங்க அம்மா எதை வைத்துக் கொடுத்தாலும் அந்த சுவையே தனிதான். இங்கு சமையல் குறித்த தகவல்கள் வழங்குவது எல்லாம் சமைக்கத் தெரியாத மற்றும் சதா ஒரே சமையலை செய்து கொடுக்கும் பெண்களுக்காக இந்த பக்கம். எனது பெயர் கமலி.

Leave a Reply

Your email address will not be published.

Back to top button