
சமைக்க தேவையானவை
- கோவைக்காய் – 1/4 கிலோ
- மிளகாய் தூள் – 3/4 டீஸ்பூன்
- பச்சைமிளகாய் – 1
- மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
- பழுத்த தக்காளி – 2
- இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
- கொத்தமல்லித்தழை – சிறிது
- எண்ணெய் – 3 டீஸ்பூன்
- பட்டை – சிறு துண்டு
- உப்பு – தேவைக்கு
செய்முறை
முதலில் கோவைக்காயை மீடியமாக அரிந்து அதில் தக்காளியை பிழிந்து, மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு, இஞ்சிபூண்டு விழுது, கொத்தமல்லித்தழை, பச்சைமிளகாய் எல்லாம் சேர்த்து 10 நிமிடம் ஊறவைக்கவேண்டும்.
பிறகு குக்கரில் எண்ணெய் விட்டு பட்டை சேர்த்து, ஊறவைத்த கோவைக்காயை சேர்த்து நன்கு கிளறி மூடி போட்டு 1 விசில் விட்டு இறக்கவேண்டும். பின் சுவையான கோவைக்காய் பொரிச்ச கறி ரெடி.
உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
+1
+1
+1
+1
+1
+1