சாப்பாடுசிறுதானியங்கள்டயட் உணவுகள்மூலிகை உணவுகள்ரைஸ்வெரைட்டி ரைஸ்

சத்தான பச்சைப் பயிறு சாதம்

Pachchai Payaru Satham

சமைக்க தேவையானவை


 • அரிசி 1 – கப் பச்சை
 • பயிறு – 1/2 கப்
 • கடுகு – 1/2 ஸ்பூன்
 • சீரகம் – 1/2 ஸ்பூன்
 • பச்சை மிளகாய் – 2 கீனியது
 • கறிவேப்பிலை – 2 கொத்து
 • பூண்டு பொடியாக நறுக்கியது – 6 பல்
 • எண்ணெய் – 4 ஸ்பூன்
 • வெட்டி பெரிய வெங்காயம் – 1
 • சாம்பார் பொடி-2 ஸ்பூன்
 • மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன்
 • உப்பு தேவையான அளவு.


செய்முறை


முதலில் 1 கப் அளவு சாப்பாட்டு அரிசி, 1/2 கப் பச்சை பயிறு நமக்கு தேவைப்படும். எந்த கப்பில் அரிசியை அளக்கிறீர்களோ, அதே கப்பில் பச்சைப் பயறையும் அளந்து எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த இரண்டு பொருட்களையும் ஒன்றாக சேர்த்து ஒரு அகலமான பவுலில் போட்டு தண்ணீர் ஊற்றி அரை மணி நேரம் ஊறவைத்து விடுங்கள். ஊறிய இந்த பொருட்களை 3 முறை நன்றாகக் கழுவி தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இது அப்படியே இருக்கட்டும்.

அடுத்தபடியாக அடுப்பில் ஒரு குக்கரை வைத்துக் கொள்ளுங்கள். அதில் எண்ணெய் – 4 ஸ்பூன் ஊற்றிக் கொள்ளவேண்டும். எண்ணெய் காய்ந்ததும், கடுகு – 1/2 ஸ்பூன், சீரகம் – 1/2 ஸ்பூன், பச்சை மிளகாய் – 2 கீனியது, கறிவேப்பிலை – 2 கொத்து, பூண்டு பொடியாக நறுக்கியது – 6 பல், இவைகளை சேர்த்து நன்றாக வதக்கி விட வேண்டும்.

அடுத்தப்படியாக நீளவாக்கில் வெட்டி பெரிய வெங்காயம் – 1 சேர்த்து வெங்காயத்தை பொன் நிறம் வரும் வரை வதக்கி, பொடியாக நறுக்கிய – 2 தக்காளி பழங்களை சேர்த்து, மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன், உப்பு தேவையான அளவு, போட்டு தக்காளி குழையும் வரை வதக்கிக் கொள்ள வேண்டும். தக்காளி வதங்கி வந்ததும் சாம்பார் பொடி-2 ஸ்பூன் சேர்த்து மீண்டும் 2 நிமிடங்கள் நன்றாக வதக்கி, 3 கப் அளவு தண்ணீரை குக்கரில் உள்ள மசாலா பொருட்களோடு சேர்த்து நன்றாக கொதிக்க விடுங்கள்.

எந்த கப்பில் அரிசி அளந்தீர்களோ அதே கப்பில் தண்ணீர் எடுத்து ஊற்றிக் கொள்ள வேண்டும். தண்ணீர் நன்றாக கொதி வந்த உடன் ஊற வைத்து கழுவி தயாராக வைத்திருக்கும் அரிசியையும் பருப்பையும் குக்கரில் போட்டு நன்றாக கலந்து விட்டு மேலே பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழைகளைத் தூவி விசில் போட்டு, 3 விசில் வைத்தால் போதும். சூப்பரான ஆரோக்கியமான பச்சைப்பயிறு சாதம் தயார்.

உங்க வீட்ல அரிசி வேகுவதற்கு எவ்வளவு விசில் விடுவீர்களோ அந்த அளவிற்கு விசில் வைத்துக்கொண்டால் போதும். சாதாரணமாக சாப்பாடு குக்கரில் வைக்கும் அளவிலேயே இந்த ரெசிபியை செய்தால் நல்ல ருசி கிடைக்கும்.

உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

பகிருங்கள்

அம்மா சமையல்

அம்மா சமையல் என்றால் எனக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே பிடிக்கும். அந்த கை பக்குவம் வேற யாருக்கும் வரவே வராது. இன்னும் என்னோடு எங்க அம்மா சமையல் வாசம் ஒட்டிக் கொண்டிருக்கிறது. தாமிரபரணி தண்ணீர் என்பதால் எங்க அம்மா எதை வைத்துக் கொடுத்தாலும் அந்த சுவையே தனிதான். இங்கு சமையல் குறித்த தகவல்கள் வழங்குவது எல்லாம் சமைக்கத் தெரியாத மற்றும் சதா ஒரே சமையலை செய்து கொடுக்கும் பெண்களுக்காக இந்த பக்கம். எனது பெயர் கமலி.

Leave a Reply

Your email address will not be published.

Back to top button