குருமாகுழம்பு

சன்னா மசாலா

Sanna masala

சமைக்க தேவையானவை


 • வெள்ளை கொண்டைக் கடலை – 100 கிராம்
 • தக்காளி – 1
 • வெங்காயம் – 1
 • சீரகம் – 1 ஸ்பூன்
 • மஞ்சள் பொடி – 1 ஸ்பூன்
 • மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன்
 • சன்னா மசாலா – 2 ஸ்பூன்
 • மல்லித்தூள் – 1 ஸ்பூன்
 • எண்ணெய் – தேவையான அளவு
 • உப்பு -தேவையான அளவு
 • கொத்தமல்லி – சிறிதளவு


செய்முறை


முதலில் வெள்ளை கொண்டை கடலையை குக்கரில் வேக வைத்து கொள்ளவும். அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடான பிறகு சீரகம், வெங்காயம், தக்காளி ஆகியவை சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும்.

நன்கு வதங்கிய பிறகு வேக வைத்த கடலை, மஞ்சள் பொடி, மிளகாய் தூள், சன்னா மசாலா, மல்லித்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவை சேர்த்து ஒரு 15 நிமிடம் கொதிக்க விடவும்.

பிறகு அடுப்பில் இருந்து இறக்கி வாசனைக்கு சிறிதளவு கொத்தமல்லி தழையை தூவி விட்டால் சுவையான சன்னா மசாலா தயார். இதனை சோலா பூரி, சப்பாத்தி, பரோட்டா ஆகியவைக்கு சேர்த்து சாப்பிட்டால் சுவை அள்ளும்.

உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
பகிருங்கள்

அம்மா சமையல்

அம்மா சமையல் என்றால் எனக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே பிடிக்கும். அந்த கை பக்குவம் வேற யாருக்கும் வரவே வராது. இன்னும் என்னோடு எங்க அம்மா சமையல் வாசம் ஒட்டிக் கொண்டிருக்கிறது. தாமிரபரணி தண்ணீர் என்பதால் எங்க அம்மா எதை வைத்துக் கொடுத்தாலும் அந்த சுவையே தனிதான். இங்கு சமையல் குறித்த தகவல்கள் வழங்குவது எல்லாம் சமைக்கத் தெரியாத மற்றும் சதா ஒரே சமையலை செய்து கொடுக்கும் பெண்களுக்காக இந்த பக்கம். எனது பெயர் கமலி.

Leave a Reply

Back to top button