
சமைக்க தேவையானவை
- பெரிய வெங்காயம் – ஒன்று
- கேரட் – 100 கிராம்
- தக்காளி – ஒன்று
- மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
- உப்பு – தேவைக்கு ஏற்ப
- மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை
- பீன்ஸ் – 100 கிராம்
- எண்ணெய் – ஒரு தேக்கரண்டி
- உருளை – ஒன்று
தாளிக்க
- பட்டை, கிராம்பு, லவங்கம் – தலா ஒன்று
- கறிவேப்பிலை, கொத்தமல்லி – தேவைக்கு
அரைக்க
- தேங்காய் – அரை மூடி
- பெருஞ்சீரகம் – ஒரு தேக்கரண்டி
- பூண்டு – 5 பல்
- இஞ்சி – ஒரு அங்குல துண்டு
செய்முறை
முதலில் அரைக்க கொடுத்தவற்றை அரைத்து வைக்கவேண்டும் .பின்பு வெங்காயம், தக்காளி, மற்ற காய்களை பொடியாக நறுக்கி வைக்கவேண்டும் .
பின்பு கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்தவற்றை போட்டு தாளிக்கவும். அதில் வெங்காயம் தக்காளியை சேர்த்து வதக்கவும் நன்றாக வதங்கியதும் அரைத்த விழுதை அதில் சேர்த்து கிளறவும்.
பச்சை வாசனை போனதும் காய்களை சேர்க்கவும். இரண்டு டம்ளர் தண்ணீர், மஞ்சள் தூள், மிளகாய்தூள், உப்பு சேர்த்து நன்றாக மூடி வேக வைக்கவும். குருமா சுண்டி வரும் போது கொத்தமல்லி தூவி இறக்கவும். சூடான சப்பாத்திக்கு குருமா ரெடி.
உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
+1
+1
+1
+1
+1
+1