
சமைக்க தேவையானவை
- சப்பாத்தி – 3
- வெங்காயம் – 1
- சோயா சாஸ் – 1/2 டீஸ்பூன்
- சில்லி சாஸ் – 1 டேபிள்ஸ்பூன்
- தக்காளி சாஸ் – 1 டேபிள்ஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
- எண்ணெய் – 1 டீஸ்பூன்
- கொத்தமல்லி – சிறிது
செய்முறை
வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். சப்பாத்தியை நீளவாக்கில் வெட்டி வைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கி கொள்ளவும்.
பிறகு இதில் சோயா சாஸ், சில்லி சாஸ், தக்காளி சாஸ், சிறிது உப்பு சேர்த்து குறைந்த தீயில் வதக்கவும்
பிறகு வெட்டியை சப்பாத்தி நூடுல்ஸ் இதனுள் சேர்க்கவும் குறைந்த தீயில் 2 நிமிடம் வதக்கி குறைந்த தீயில் 2 நிமிடம் மூடி வைத்து இறுதியாக கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும். விருப்பப்பட்டால் இதனுடன் முட்டை அல்லது விருப்பப்பட்ட காய்கள் சேர்த்து கொள்ளவும்.
உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
+1
+1
+1
+1
+1
+1