சமையல் குறிப்புகள்

சமையல் டிப்ஸ் பகுதி 05

Kichen Cooking Tips | Part 05

 சமையல் டிப்ஸ் பகுதி 05

1) அடுப்பு, சமையல் மேடை, அடுப்பின் பின்புறம் என எல்லா இடங்களிலும் எண்ணெய் அப்பிக் கொண்டிருக்கிறதா? கவலை வேண்டாம். சாதாரணத் துணியாலோ அல்லது டிஷ்யூ பேப்பராலோ துடைத்து எடுங்கள். பின்னர் வெதுவெதுப்பான நீரில் கொஞ்சம் சலவைச் சோடாவைக் கலந்து பிசுக்கு பிடித்த இடங்களில் பூசிவிட்டு, உலர்ந்த துணியால் துடைத்துப்பாருங்கள். பளிச் சென்று ஆகிவிடும்.

2) கண்ணாடி பாட்டில் துர்நாற்றம் வீசுகிறதா? கொஞ்சம் கடுகைப் போட்டு வெந்நீர் ஊற்றி சிறிது நேரம் கழித்துக் கழுவுங்கள். துர்நாற்றம் போய்விடும்.

3) கேரட் அல்வா செய்யும் போது கேரட்டைக் கொதிக்கும் தண்ணீரில் போட்டு பின்பு குளிர்ந்த தண்ணீரில் சிறிது நேரம் வைத்துத் தோலைச் சீவினால் மிகச் சுலபமாகத் தோலை நீக்கிவிடலாம்.

4) வடைக்கு அரைக்கும் போது தண்ணீர் அதிகமாகிவிட்டால் ஒரு தேக்கரண்டி நெய் விட்டால் மாவு இறுகிவிடும்.

5) பஞ்சு போன்ற இட்லிக்குக் கிரைண்டரில் உளுந்தம் பருப்பு, பாதி மசிந்ததும் எட்டு ஜஸ் க்யூப்களைப் போட்டு அரையுங்கள். மாவும் அதிகம் வரும். இட்லியும் பூப்போல மெத்தென்றிருக்கும்.

6) ப்ரைட் ரைஸ் மற்றும் வெஜிடபிள் பிரியாணி செய்யும் போது, அதனுடன் வேக வைத்த சோளத்தையும் சிறிது சேர்த்துக் கொள்ள வேண்டும். இது பார்ப்பதற்கு அழகாக இருப்பது மட்டுமின்றி, உணவின் சுவையும் சூப்பராக இருக்கும்.

7) முள்ளங்கி, காலிபிளவர் போன்ற காய்களை வாங்கும் போது, அவற்றின் இலைகளோடு சேர்த்து வாங்க வேண்டும். அந்த இலைகளை பொடியாக நறுக்கி, பருப்பு சேர்த்து கூட்டு சமைத்து சாப்பிட நன்றாக இருக்கும். சூப் தயாரித்தும் சாப்பிடலாம்.

8) அரைத்து விட்ட சாம்பார் செய்யும் போது, அரைக்க வேண்டிய சாமான்களுடன் கொஞ்சம் கசகசாவை வறுத்து அரைத்தால் சாம்பார் சுவையாக இருக்கும்.

9) பாயசம் செய்யும் போது பால் திரிந்து போனால், இரண்டு சிட்டிகை சமையல் சோடாவை போட்டால் திரிந்த பால் சரியாகிவிடும்.

10) தயிர் பச்சடி, சாலட் என்று எது செய்தாலும், தேங்காய் எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து கொட்ட, வாசனை சற்று தூக்கலாக இருக்கும்.

உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

பகிருங்கள்

அம்மா சமையல்

அம்மா சமையல் என்றால் எனக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே பிடிக்கும். அந்த கை பக்குவம் வேற யாருக்கும் வரவே வராது. இன்னும் என்னோடு எங்க அம்மா சமையல் வாசம் ஒட்டிக் கொண்டிருக்கிறது. தாமிரபரணி தண்ணீர் என்பதால் எங்க அம்மா எதை வைத்துக் கொடுத்தாலும் அந்த சுவையே தனிதான். இங்கு சமையல் குறித்த தகவல்கள் வழங்குவது எல்லாம் சமைக்கத் தெரியாத மற்றும் சதா ஒரே சமையலை செய்து கொடுக்கும் பெண்களுக்காக இந்த பக்கம். எனது பெயர் கமலி.

Leave a Reply

Your email address will not be published.

Back to top button