அல்வாஸ்வீட்

சர்க்கரைவள்ளி கிழங்கு அல்வா

Sugar beet alva

சமைக்க தேவையானவை


  • சர்க்கரைவள்ளிக் கிழங்கு – 250 கிராம்,
  • சர்க்கரை – 200 கிராம்,
  • ஏலக்காய்த்தூள் – சிறிதளவு,
  • முந்திரிப் பருப்பு – 10,
  • நெய் – 100 மில்லி,
  • கேசரி பவுடர் – சிறிதளவு

சர்க்கரைவள்ளிக் கிழங்கை நன்கு வேக வைத்து, தோல் உரித்து மசித்துக் கொள்ளவும். சர்க்கரையில் சிறிது தண்ணீர் விட்டு சூடாக்கி, சர்க்கரை கரைந்ததும் மசித்த வள்ளிக்கிழங்கை சேர்த்து நன்கு கிளறவும்.
நெய்யை உருக்கி கொஞ்சம் கொஞ்சமாக அதில் விடவும்.

அல்வா பதம் வந்ததும்… வறுத்த முந்திரி, ஏலக்காய்த்தூள், கேசரி பவுடர் சேர்த்து நன்கு கிளறி எடுக்கவும். குறிப்பு: உருளைக்கிழங்கு, பீட்ரூட், கேரட்டிலும் இதேபோல அல்வா செய்யலாம்.

உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
பகிருங்கள்

அம்மா சமையல்

அம்மா சமையல் என்றால் எனக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே பிடிக்கும். அந்த கை பக்குவம் வேற யாருக்கும் வரவே வராது. இன்னும் என்னோடு எங்க அம்மா சமையல் வாசம் ஒட்டிக் கொண்டிருக்கிறது. தாமிரபரணி தண்ணீர் என்பதால் எங்க அம்மா எதை வைத்துக் கொடுத்தாலும் அந்த சுவையே தனிதான். இங்கு சமையல் குறித்த தகவல்கள் வழங்குவது எல்லாம் சமைக்கத் தெரியாத மற்றும் சதா ஒரே சமையலை செய்து கொடுக்கும் பெண்களுக்காக இந்த பக்கம். எனது பெயர் கமலி.

Leave a Reply

Back to top button