கேக்ஸ்வீட்

சாக்லேட் ப்ரௌனி

Chocolate Brownie

சமைக்க தேவையானவை


  • மைதா – 1/2 கப்
  • உப்பில்லாத வெண்ணெய் – 1/2 கப்
  • சர்க்கரை – 3/4 கப்
  • முட்டை – 2
  • கொக்கோ பவுடர் – 1/3 கப்
  • வென்னிலா எசன்ஸ் – 1 டீஸ்பூன்
  • பேக்கிங் பவுடர் – 1/4 டீஸ்பூன்
  • சாக்லேட் சிப்ஸ் – 1 கப்
  • உப்பு – 1/4 டீஸ்பூன்


செய்முறை


முதலில் ஓவனை 180 டிகிரி செல்சியஸில் சூடேற்றிக் கொள்ள வேண்டும். பின் ஒரு பேக்கிங் ட்ரே/பேனை எடுத்து, அதன் மேல் அலுமினியத் தாளை விரித்து, மேலே எண்ணெயைத் தடவி தனியாக வைத்துக் கொள்ளவும். பின்பு ஒரு பேனில் வெண்ணெயைப் போட்டு அடுப்பில் வைத்து, குறைவான தீயில் உருக வைக்கவும்.

பின் அதில் சர்க்கரையை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். இப்போது அதில் கொக்கோ பவுடர், வென்னிலா எசன்ஸ் மற்றும் முட்டைகளை உடைத்து ஊற்றி நன்கு கிளறிவிட வேண்டும் பின்பு அதில் மைதா, பேக்கிங் பவுடர், உப்பு சேர்த்து நன்கு கிளறி விடுங்கள்.

பின் அதில் சாக்லேட் சிப்ஸ் சேர்த்து நன்கு கிளறி விட்டு, அடுத்து அதை எண்ணெய் தடவிய அலுமினியத் தாளில் ஊற்றி தட்டையாக பரப்பிவிடவும். பிறகு அந்த ட்ரேயை ஓவனில் வைத்து, 20 நிமிடம் பேக்கிங் செய்து எடுத்தால், சுவையான சாக்லேட் ப்ரௌனி தயார்.

உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
பகிருங்கள்

அம்மா சமையல்

அம்மா சமையல் என்றால் எனக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே பிடிக்கும். அந்த கை பக்குவம் வேற யாருக்கும் வரவே வராது. இன்னும் என்னோடு எங்க அம்மா சமையல் வாசம் ஒட்டிக் கொண்டிருக்கிறது. தாமிரபரணி தண்ணீர் என்பதால் எங்க அம்மா எதை வைத்துக் கொடுத்தாலும் அந்த சுவையே தனிதான். இங்கு சமையல் குறித்த தகவல்கள் வழங்குவது எல்லாம் சமைக்கத் தெரியாத மற்றும் சதா ஒரே சமையலை செய்து கொடுக்கும் பெண்களுக்காக இந்த பக்கம். எனது பெயர் கமலி.

Leave a Reply

Back to top button