சைவம்வற்றல்/வடகம்

சாத வடகம்

Vatakam rice

சமைக்க தேவையானவை


  • வேக வைத்த சாதம் – 1 கப்
  • மிளகாய் வத்தல் – 2
  • சீரகம் – 1 தேக்கரண்டி
  • பெருங்காயத் தூள் – 1/2 தேக்கரண்டி
  • உப்பு – தேவையான அளவு


செய்முறை


வேக வைத்த சாதத்துடன் மிளகாய் வத்தல், பெருங்காயத் தூள், சீரகம், உப்பு சேர்த்து மிக்ஸி அல்லது கிரைண்டரில் அரைத்துக் கொள்ளவும். சாதத்தில் உப்பு இருப்பதால் தேவைக்கு ஏற்ப சேர்த்துக் கொள்ளவும்.
தட்டில் லேசாக எண்ணெய் தடவி அதில் அரைத்து வைத்துள்ள சாதத்தை ஒரு மேஜைக்கரண்டி அளவு எடுத்து வட்ட வட்டமாக வைக்கவும். அல்லது முறுக்கு செய்யும் அச்சில் இந்த மாவை போட்டு பிளாஸ்டிக் பேப்பரிலும் பிழியலாம்.

பிறகு எல்லா தட்டுகளையும் மொட்டை மாடியில் அல்லது வெயில் வரும் இடத்தில் ஒரு நாள் முழுவதும் வைக்கவும். அடுத்த நாள் வடகத்தை ஒரு சிறிய கரண்டியால் எடுத்து மாற்றி போட்டு மீண்டும் வெயிலில் காய வைக்கவும். இப்போது வடகங்கள் நன்கு காய்ந்து விடும்.

காய்ந்த வடகங்களை ஒரு காற்றுப் புகாத பாட்டிலில் போட்டு வைக்கவும். தேவையான போது எடுத்து வறுத்துக் கொள்ளலாம். குறிப்பு – மீந்து போன சாதத்திலும் இதே முறையில் வடகம் செய்யலாம்.

உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
பகிருங்கள்

அம்மா சமையல்

அம்மா சமையல் என்றால் எனக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே பிடிக்கும். அந்த கை பக்குவம் வேற யாருக்கும் வரவே வராது. இன்னும் என்னோடு எங்க அம்மா சமையல் வாசம் ஒட்டிக் கொண்டிருக்கிறது. தாமிரபரணி தண்ணீர் என்பதால் எங்க அம்மா எதை வைத்துக் கொடுத்தாலும் அந்த சுவையே தனிதான். இங்கு சமையல் குறித்த தகவல்கள் வழங்குவது எல்லாம் சமைக்கத் தெரியாத மற்றும் சதா ஒரே சமையலை செய்து கொடுக்கும் பெண்களுக்காக இந்த பக்கம். எனது பெயர் கமலி.

Leave a Reply

Back to top button