
சமைக்க தேவையானவை
- நெய் – 100 மி.லி
- இஞ்சி – ஒரு சிறு துண்டு
- சீரகம் – ஒரு டீஸ்பூன்
- பெருங்காயத் தூள் – சிறிதளவு
- பாசிப் பருப்பு – 100 கிராம்
- சாமை அரிசி – 250 கிராம்
- வறுத்த முந்திரி – 10
- உப்பு – தேவையான அளவு
செய்முறை
முதலில் பாசிப்பருப்பு மற்றும் அரிசியைக் களைந்து ஒரு பங்கு அரிசிக்கு நான்கு பங்கு தண்ணீர் விட்டு குக்கரில் வைத்து, ஐந்து விசில் வந்ததும் இறக்கவும்.
கடாயில் நெய் விட்டு மிளகு, சீரகம், இஞ்சியை வறுத்துக்கொள்ளவும். வேகவைத்த சாதம், பருப்புடன் வறுத்த முந்திரி, பெருங்காயத் தூள் சேர்த்துக் கலக்கவும்.
உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
+1
+1
+1
+1
+1
+1