சிக்கன்பிரியாணி அசைவம்

சாமை கோழி பிரியாணி

Tamarind chicken biryani

சமைக்க தேவையானவை


  • நாட்டு கோழி – 500 கிராம்
  • மஞ்சள் தூள் – ½ டீஸ்பூன்
  • இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
  • நெய் – 1 டீஸ்பூன்
  • எண்ணெய் – 2 டீஸ்பூன்
  • கொத்துமல்லி – ஒரு கைப்பிடி
  • புதினா – ஒரு கைப்பிடி
  • காஷ்மீரி மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
  • சாமை அரிசி – 500 கிராம்
  • பிரியாணி இலை – 2
  • பட்டை – 3
  • கிராம்பு – 6
  • ஏலக்காய் – 5
  • அன்னாசி பூ – 2
  • வெங்காயம் – 2
  • இஞ்சி – 50 கிராம்
  • பூண்டு – 50 கிராம்
  • தக்காளி – 2
  • தயிர் – 2 கப்
  • தேங்காய் பால் – ¼ கப்


செய்முறை


ஒரு பாத்திரத்தில் நறுக்கிய நாட்டு கோழி அத்துடன் சிறிதளவு மஞ்சள் தூள் 1 ½ தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது மற்றும் தேவையான உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து 30 நிமிடம் குளிர் சாதன பெட்டியில் வைக்கவும்.

ஒரு வாணலி யில் சிறிதளவு எண்ணெய் மற்றும் நெய் சேர்த்து அதனுடன் பிரியாணி இலை, பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசிப் பூ போட்டு வதக்கவும். இதனுடன் நீளவாக்கில் வெட்டி வைத்துள்ள வெங்காயம் சிறிதளவு உப்பு சேர்த்து வதக்க

பின்னர், இஞ்சிப் பூண்டு விழுது சேர்த்து, பச்சை வாசனை போன பின் புதினா மற்றும் கொத்துமல்லியைச் சேர்க்கவும். பின்னர் நறுக்கிய தக்காளி மற்றும் மஞ்சள் தூள், தயிர் காஷ்மீரி மிளகாய் தூள் ஆகிய வற்றுடன், தயாரித்து வைத்துள்ள சிக்கன் கலவையைச் சேர்த்து 10 நிமிடங்கள் வேக வைக்கவும்.

கால் கப் தேங்காய் பால் மற்றும் தேவையான தண்ணீர், சாமை அரிசி சிறிதளவு நெய் மற்றும் புதினா, கொத்து மல்லியைச் சேர்த்து 15 நிமிடங்கள் வேக வைத்து இறக்கவும். கமகமக்கு சாமை கோழி பிரியாணி ரெடி.

உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
பகிருங்கள்

அம்மா சமையல்

அம்மா சமையல் என்றால் எனக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே பிடிக்கும். அந்த கை பக்குவம் வேற யாருக்கும் வரவே வராது. இன்னும் என்னோடு எங்க அம்மா சமையல் வாசம் ஒட்டிக் கொண்டிருக்கிறது. தாமிரபரணி தண்ணீர் என்பதால் எங்க அம்மா எதை வைத்துக் கொடுத்தாலும் அந்த சுவையே தனிதான். இங்கு சமையல் குறித்த தகவல்கள் வழங்குவது எல்லாம் சமைக்கத் தெரியாத மற்றும் சதா ஒரே சமையலை செய்து கொடுக்கும் பெண்களுக்காக இந்த பக்கம். எனது பெயர் கமலி.

Leave a Reply

Back to top button