அசைவம்பிரியாணிபிரியாணி அசைவம்

சாமை நாட்டுக் கோழி பிரியாணி

saamai chicken briyani

சமைக்க தேவையானவை


  • நாட்டு கோழி – 500 கிராம்
  • பட்டை – 3
  • மஞ்சள் தூள் – ½ டீஸ்பூன்
  • கிராம்பு – 6
  • இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
  • ஏலக்காய் – 5
  • புதினா – ஒரு கைப்பிடி
  • அன்னாசி பூ – 2
  • காஷ்மீரி மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
  • இஞ்சி – 50 கிராம்
  • சாமை அரிசி – 500 கிராம்
  • வெங்காயம் – 2
  • நெய் – 1 டீஸ்பூன்
  • பூண்டு – 50 கிராம் , தக்காளி – 2
  • எண்ணெய் – 2 டீஸ்பூன்
  • தயிர் – 2 கப்
  • கொத்துமல்லி – ஒரு கைப்பிடி
  • தேங்காய் பால் – ¼ கப்
  • பிரியாணி இலை – 2

செய்முறை :


முதலில் ஒரு பாத்திரத்தில் நறுக்கிய நாட்டு கோழி அத்துடன் சிறிதளவு மஞ்சள் தூள் 1 ½ தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது மற்றும் தேவையான உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து 30 நிமிடம் குளிர் சாதன பெட்டியில் வைக்கவும்.

ஒரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் மற்றும் நெய் சேர்த்து அதனுடன்பிரியாணி இலை, பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசிப் பூ போட்டு வதக்கவும். இதனுடன் நீளவாக்கில் வெட்டி வைத்துள்ள வெங்காயம் சிறிதளவு உப்பு சேர்த்து வதக்கயி பின்னர், இஞ்சிப் பூண்டு விழுது சேர்த்து, பச்சை வாசனை போன பின் புதினா மற்றும் கொத்துமல்லியைச் சேர்க்கவும்

பின்னர் நறுக்கிய தக்காளி மற்றும் மஞ்சள் தூள், தயிர் காஷ்மீரி மிளகாய் தூள் ஆகியவற்றுடன், தயாரித்து வைத்துள்ள சிக்கன் கலவையைச் சேர்த்து 10 நிமிடங்கள் வேக வைக்கவும்.

கால் கப் தேங்காய் பால் மற்றும் தேவையான தண்ணீர், சாமை அரிசி சிறிதளவு நெய் மற்றும் புதினா, கொத்துமல்லியைச் சேர்த்து 15 நிமிடங்கள் வேக வைத்து இறக்கவும்.


சாமை

சிறுதானிய தாவரங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்த தானியமாக கருதப்படுவது சாமை. சாமை இந்தியாவில் அதிகளவில் விளைவிக்கப்படுகிறது. இது ஆங்கிலத்தில் ‘Little Millet’ என அழைக்கபடுகிறது. இந்த தானியம் உயரமாகவும், நேராகவும் 30 செ.மீ முதல் 1 மீட்டர் வரை வளரக்கூடியது. இதன் இலையானது ஒரே அளவாக ஒடுங்கி நீளமாகவும், மேற்பரப்பில் சுணை போன்ற முடிகளும் காணப்படும்.


சாமை தானியத்தின் வரலாறு

சாமை தானியமானது 5000 ஆண்டுகளுக்கு முன்னரே தெற்கு ஆசியக் கண்டத்தில் தோன்றியது. இந்தியாவில் உருவான இத்தானியம் இந்தியன் மிலட் எனவும் அழைக்கப்படுகிறது. இந்தியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளின் பல பிரதேசங்களில் கி.மு காலத்திலிருந்தே இந்த தானியம் பயிரிடப்பட்டு வந்துள்ளது. மேலும் இத்தானியம் மக்களின் முக்கிய உணவாக இருந்ததாக பண்டைய தழிழர்களின் கல்வெட்டுகளிலும், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களாலும் கூறப்படுகிறது. தற்போது இது பரவலாக இந்தியா, இலங்கை, நேபாளம், மலேசியா, மேற்கு மியன்மார் ஆகிய நாடுகளில் பயிரிடப்பட்டு வருகிறது.


சாமை-ல் அடங்கியுள்ள ஊட்டச்சத்துக்கள்

புரதச்சத்து, கொழுப்புச்சத்து, தாது உப்புகள், மக்னீஷியம், சோடியம், பொட்டாசியம், காப்பர், மாங்கனீசு, துத்தநாகம், நார்ச்சத்து, மாவுச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து ஆகியவை அடங்கியுள்ளன.


சாமையின் மருத்துவ குணங்கள்


உடலுக்கு வலிமை தரும்

இதில் உள்ள அதிகப்படியான கால்சியம் காரணமாக எலும்புகள் வலு பெறுகின்றன. மேலும் உடலின் தசைகளையும் வலிமை பெறச் செய்கிறது.


விந்தணு உற்பத்தி அதிகரிக்கும்

சாமை காய்ச்சலினால் ஏற்படும் நாவறட்சியை போக்கும். வயிறு தொடர்பான நோய்களை கட்டுப்படுத்தும். ஆண்களின் இனப்பெருக்க விந்தணு உற்பத்திக்கும், ஆண்மைக் குறைவையும் நீக்கும். தாது பொருட்களை உடலில் அதிகரித்து உயிரணுக்களின் எண்ணிக்கையை கணிசமாக உயர்த்தும்.


இரத்த சோகை ஏற்படாமல் தடுக்கும்

சாமையில் மற்ற சிறு தானியங்களைக் காட்டிலும் இரும்புசத்து அதிகம். இதனால் இரத்த சோகை நோய் வராமல் தடுக்கபடுகிறது. உடல் உறுதிக்கும், ஆரோக்கியத்திற்கும் சாமை மிகவும் இன்றியமையாதது.


சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்திருக்கும்

அரிசியை காட்டிலும் ஏழு மடங்கு அதிக நார்சத்து கொண்ட தானியம் சாமை. சர்க்கரை நோயை கட்டுப்பாட்டிற்க்குள் கொண்டுவர முக்கிய பங்குவகிப்பது நார்சத்து. இதனை உணவாக உட்கொள்ளும் போது சர்க்கரை நோயினை கட்டுப்படுத்தும், மேலும் ஆரம்ப நிலையில் உள்ள சர்க்கரை நோயை வராமல் தடுத்திடும்.


மலச்சிக்கலை போக்கும்

மலக்கழிவுகள் உடலிருந்து சரியாக வெளியேறவிட்டால் பல்வேறு நோய்கள் ஒன்றன் பின் ஒன்றாக வரும். சாமையை உணவோடு சேர்த்து கொண்டால் நோய்களுக்கெல்லாம் மூலமாக கருதப்படும் மலச்சிக்கலிருந்து விடுபட முடியும். இதுமட்டுமல்லாமல் வயிற்றுக் கோளறுகளையும் சரி செய்யும்.

உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
பகிருங்கள்

அம்மா சமையல்

அம்மா சமையல் என்றால் எனக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே பிடிக்கும். அந்த கை பக்குவம் வேற யாருக்கும் வரவே வராது. இன்னும் என்னோடு எங்க அம்மா சமையல் வாசம் ஒட்டிக் கொண்டிருக்கிறது. தாமிரபரணி தண்ணீர் என்பதால் எங்க அம்மா எதை வைத்துக் கொடுத்தாலும் அந்த சுவையே தனிதான். இங்கு சமையல் குறித்த தகவல்கள் வழங்குவது எல்லாம் சமைக்கத் தெரியாத மற்றும் சதா ஒரே சமையலை செய்து கொடுக்கும் பெண்களுக்காக இந்த பக்கம். எனது பெயர் கமலி.

Leave a Reply

Back to top button