பரோட்டாபாஸ்ட் ஃபுட்

சிக்கன் கீமா பரோட்டா

chicken Keema paratha

சமைக்க தேவையானவை


  • எலுமில்லாத சிக்கன் – அரை கிலோ
  • இஞ்சி, பூண்டு விழுது – ஒரு தேக்கரண்டி
  • தக்காளி – 1
  • கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை – சிறிதளவு
  • மிளகாய் தூள் + தனியா தூள் – ஒரு தேக்கரண்டி
  • எண்ணெய் – தேவைக்கு
  • மைதா மாவு – கால் கப்
  • கரம் மசாலா – கால் தேக்கரண்டி
  • மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை
  • பச்சை மிளகாய் – 1
  • உப்பு – தேவைக்கு
  • வெங்காயம் – 1
  • பெருஞ்சீரகம் – அரை ஸ்பூன்
  • கோதுமை மாவு – 1 கப்


செய்முறை


முதலில் மைதாவுடன் கோதுமையை கலந்து உப்பு போட்டு தேவையான அளவு நீர், 2 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து மூடி வைக்கவும்.பின்பு சிக்கனை நன்றாக வேக வைத்து உதிர்த்து எடுத்துக் கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும்.

பின்னர் கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் பெருஞ்சீரகம் போட்டு தாளித்த பின் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். வெங்காயம் முக்கால் பாகம் வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கி, பின் தக்காளி, கொத்தமல்லித் தழை சேர்த்து தக்காளி நன்றாக மசியும் வரை வதக்கவும்.

இதில் மிளகாய் தூள், தனியா தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள் சேர்த்து 3 மேசைக்கரண்டி அளவு நீர் விட்டு தூள் வாசம் போக வதக்கவும். தூள் வாசம் போனதும் பொடியாக உதிர்த்த சிக்கன் துண்டுகள் சேர்த்து நன்றாக கலந்து மசாலா நன்றாக சேர்ந்த உடன் வதக்கி இறக்கவும்.

பிசைந்து வைத்துள்ள மாவில் சப்பாத்தி தேய்த்து அதன் நடுவே இந்த கலவையை வைக்கவும். பின்னர் அதன் மேலே இன்னொரு சப்பாத்தியை வைத்து மூடி ஓரங்களை ஒட்டவும். தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் பரோட்டா போட்டு சுற்றி எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும். பின்பு பரிமாறவும்.

வீடியோ இணைப்பு

உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
பகிருங்கள்
Source
Image

அம்மா சமையல்

அம்மா சமையல் என்றால் எனக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே பிடிக்கும். அந்த கை பக்குவம் வேற யாருக்கும் வரவே வராது. இன்னும் என்னோடு எங்க அம்மா சமையல் வாசம் ஒட்டிக் கொண்டிருக்கிறது. தாமிரபரணி தண்ணீர் என்பதால் எங்க அம்மா எதை வைத்துக் கொடுத்தாலும் அந்த சுவையே தனிதான். இங்கு சமையல் குறித்த தகவல்கள் வழங்குவது எல்லாம் சமைக்கத் தெரியாத மற்றும் சதா ஒரே சமையலை செய்து கொடுக்கும் பெண்களுக்காக இந்த பக்கம். எனது பெயர் கமலி.

Leave a Reply

Back to top button