
சமைக்க தேவையானவை
- கோழிக்கறி – 500 கிராம் (கொத்திய கறி)
- பாசுமதி அரிசி – 3 கப்
- கிராம்பு – 4
- மல்லித்தூள் – 2 மேசைக்கரண்டி
- பட்டை – சிறிது
- இஞ்சி, பூண்டு விழுது – 3 தேக்கரண்டி
- கரம் மசாலாத்தூள் – 2 தேக்கரண்டி
- பிரியாணி இலை – சிறிது
- மஞ்சள்தூள் – அரை தேக்கரண்டி
- தயிர் – முக்கால் கப்
- மிளகாய்த்தூள் – 2 தேக்கரண்டி
- பச்சைமிளகாய் விழுது – அரை தேக்கரண்டி
- ஏலக்காய் -4
- உப்பு – தேவையான அளவு
செய்முறை
முதலில் கோழிக்கறியுடன் மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், தயிர் மற்றும் உப்பு சேர்த்து நன்கு பிசைந்து குறைந்தது 1 மணி நேரம் குளிர் சாதனப் பெட்டியில் வைத்து ஊற விட வேண்டும். ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிரியாணி இலை, கிராம்பு, ஏலக்காய் மற்றும் பட்டைத் துண்டினைப் போட்டு வதக்க வேண்டும்.
பின்பு இதனுடன் இஞ்சி பூண்டு விழுது, பச்சைமிளகாய் விழுது ஆகியவற்றைச் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். ஊற வைத்துள்ள கோழிக்கறி துண்டுகளைச் சேர்த்து சில நிமிடங்கள் வதக்க வேண்டும். அதன் பின்பு மஞ்சள் தூள், மல்லித்தூள், மிளகாய்த்தூள் சேர்த்துக் கிளறி வதக்க வேண்டும்.
பின்பு சிறிது கரம் மசாலா, உப்பு, தேவையான தண்ணீர் சேர்த்து கொதிக்க விட வேண்டும். அதனுடன் ஊறவைத்துள்ள பாசுமதி அரிசியை சேர்த்து மூடி வைத்து வேக விட வேண்டும். வெந்தவுடன் இறக்கி, சிறிது நெய் விட்டுக் பரிமராவும்.