பரோட்டாபாஸ்ட் ஃபுட்

சில்லி பரோட்டா

chilli parotta

சமைக்க தேவையானவை


  • பரோட்டா – ( சுட்டது) 4
  • மஞ்சள் தூள் – ஒரு தேக்கரண்டி
  • கரம் மசாலாத் தூள் – ஒரு தேக்கரண்டி
  • இஞ்சி பூண்டு விழுது – ஒரு மேசைக்கரண்டி
  • சிக் பீஸ் – 1/2 கப்
  • பச்சை மிளகாய் – 2
  • கேரட் – 1
  • பீன்ஸ் – 15
  • குடை மிளகாய் – 1
  • பொடியாக நறுக்கிய கொத்தமல்லி – 1/4 கப்
  • வெங்காயம் – 1
  • உப்பு – தேவையான அளவு


செய்முறை


முதலில் பரோட்டா சிறு சிறு துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.வெங்காயம், கேரட், பீன்ஸ், குடை மிளகாய், பச்சை மிளகாய் நீள வாக்கில் வெட்டி கொள்ளவும்.

ஓரு சட்டியில் இரண்டு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கவும்.பின்பு இதனுடன் பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு போட்டு வதக்கவும்.

பிறகு அதில் நறுக்கிய கேரட், பீன்ஸ், குடைமிளகாய் சேர்த்து வதக்கவும்.இதில் மஞ்சள் தூள், கரம் மசாலா தூள், மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்.

பின்னர் எல்லாம் சிறிது நேரம் வதங்கியதும் சிக் பீஸ், பரோட்டா துண்டுகளை போட்டு,தேவையான அளவு உப்பு சேர்த்து பிரட்டி விடவும்.பரிமாறும் பொழுது நறுக்கிய கொத்தமல்லி தூவவும்.இதற்கு வெங்காயம் பச்சடி மிக ருசியாக இருக்கும்.பரிமாறவும்.

வீடியோ இணைப்பு

உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
பகிருங்கள்
Source
Image

அம்மா சமையல்

அம்மா சமையல் என்றால் எனக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே பிடிக்கும். அந்த கை பக்குவம் வேற யாருக்கும் வரவே வராது. இன்னும் என்னோடு எங்க அம்மா சமையல் வாசம் ஒட்டிக் கொண்டிருக்கிறது. தாமிரபரணி தண்ணீர் என்பதால் எங்க அம்மா எதை வைத்துக் கொடுத்தாலும் அந்த சுவையே தனிதான். இங்கு சமையல் குறித்த தகவல்கள் வழங்குவது எல்லாம் சமைக்கத் தெரியாத மற்றும் சதா ஒரே சமையலை செய்து கொடுக்கும் பெண்களுக்காக இந்த பக்கம். எனது பெயர் கமலி.

Leave a Reply

Back to top button