
சமைக்க தேவையானவை
- எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
- பூண்டு – 1 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
- வெங்காயம் – 1/2 கப் (பொடியாக நறுக்கியது)
- குடைமிளகாய் – 1/4 கப் (பொடியாக நறுக்கியது)
- வரமிளகாய் விழுது – 1 டேபிள் ஸ்பூன் (2-3 வரமிளகாயை சுடுநீரில் ஊற வைத்து, நீர்
- சேர்த்து நன்கு விழுது போல் அரைத்துக் கொள்ளவும்)
- தக்காளி சாஸ் – 1 டேபிள் ஸ்பூன்
- சோயா சாஸ் – 1/2 டீஸ்பூன்
- வினிகர் அல்லது எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன்
- தண்ணீர் – 1/4 கப்
- உப்பு – சுவைக்கேற்ப
செய்முறை
முதலில் பிரட் துண்டுகளை எடுத்து சிறு சதுரத் துண்டுகளாக வெட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபின் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், பிரட் துண்டுகளைப் போட்டு பொன்னிறமாக வறுத்து தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு அதே வாணலியில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும். பிறகு அதில் வெங்காயம், குடைமிளகாய் சேர்த்து சிறிது உப்பு தூவி நன்கு வதக்க வேண்டும்.
அடுத்து அதில் சோயா சாஸ், தக்காளி சாஸ் மற்றும் வரமிளகாய் விழுது சேர்த்து சிறிது நீர் ஊற்றி நன்கு 2 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும். பின் அதில் பிரட் துண்டுகுளை சேர்த்து நன்கு கிளறி, மேலே ஸ்பிரிங் ஆனியனைத் தூவி பிரட்டி இறக்கினால், சுவையான சில்லி பிரட் தயார்.
உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
+1
+1
+1
+1
+1
+1