
சமைக்க தேவையானவை
- சீரக சம்பா அரிசி – 1/4 கிலோ
- தேங்காய் – ஒரு மூடி
- தயிர் – அரை கிண்ணம்
- மட்டன் – அரை கிலோ
- லெமன் – 1
- புதினா – ஒரு கட்டு
- மல்லித் தழை – ஒரு கட்டு
- பெரிய வெங்காயம் – 4
தாளிக்க
- கிராம்பு – 3
- தக்காளி – 3
- பட்டை – 3 சிறிய துண்டு
- மிளகாய்த் தூள் – 1 தேக்கரண்டி
- ஏலக்காய் – 3
- மஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி
- பிரிஞ்சி இலை – ஒன்று
- இஞ்சி, பூண்டு விழுது – 2 தேக்கரண்டி
- சோம்பு – 1 தேக்கரண்டி
- இஞ்சி – 50 கிராம்
- எண்ணெய் – அரை கிண்ணம்
- பூண்டு – 25 பல்
- நெய் – அரை கிண்ணம்
- பச்சை மிளகாய் – 4
- நெய் – அரை கிண்ணம்
- உப்பு – தேவையான அளவு
செய்முறை :
பிரியாணி என்றால் பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. அதுவும் சீரக சம்பா பிரியாணியின் சுவையே தனி. சரி வாங்க அதை எப்படி வீட்டில் எளிமையாக செய்யலாம் என்பதை இங்கு காண்போம். முதலில் குக்கரில் மட்டன் போட்டு அத்துடன் கொஞ்சம் தயிர், மஞ்சள்தூள், இஞ்சி – பூண்டு விழுது மற்றும் தேவையான அளவு உப்பு, சிறிது தண்ணீர் சேர்த்து 5விசில் வரும் வரை வேக வைக்கவும். பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை கீறி வைக்கவும்
பூண்டை தனியாக அரைத்துக் கொள்ளவும். குக்கரை அடுப்பில் வைத்து நெய், எண்ணெய் இரண்டையும் சேர்த்து ஊற்றி காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை தாளித்து, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறமானதும் பூண்டு விழுதைப்போட்டு வதக்கவும்
வெங்காயம் 2 நிமிடங்கள் வதங்கியதும், மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கவும். பின்னர், நறுக்கிய தக்காளியைச் சேர்த்து வதக்கவும். அத்துடன் மீதமுள்ள தயிர் சேர்க்கவும். தேங்காயுடன் இஞ்சி, சேர்த்து மிக்ஸியில் அரைத்து தண்ணீர் ஊற்றி 4 கிண்ணம் பால் எடுத்து வைக்கவும். தேங்காய்பால், மட்டன் வேக வைத்த தண்ணீர் இரண்டும் சேர்த்து 8 கிண்ணம் அளந்து ஊற்றவும். உப்பு, புதினா, மல்லித்தழை சேர்க்கவும்.
ஒரு கொதி வந்ததும் அரிசியைப் போட்டு அதனுடன் லெமன் சாறு சேர்த்து நன்கு கிளறி குக்கரை மூடி 2 விசில் விட்டு குக்கரை இறக்கிவிடவும். பின்பு 10 நிம்டம் கழித்து குக்கரை திறந்து ஒருமுறை கிளறி விட்டு பரிமாறவும். சுவையான சீரக சம்பா மட்டன் பிரியாணி தயார்.
மேலும் ஒரு மட்டன் பிரியாணி இணைப்பை கிளிக் செய்து சமைத்து ருசியாக சாப்பிடுங்கள்.
பெயர் காரணம்
சீரகச் சம்பா (Seeraga Samba) பாரம்பரிய நெல் ரகங்களில் ஒன்றாகும். சீரகம்(Cumin seeds) எனும் சமையல் பொருளின் வடிவத்துக்கு ஒத்ததாக காணப்படுவதால், இந்த நெல்லுக்கு “சீரகச் சம்பா” எனப் பெயரிடப்பட்டுள்ளது.
தனித்துவம் / Speciality
சீரகச்சம் பாவரிசி தின்னச் சுவையாகும் பேரகத்து வாதமெல்லாம் பேருங்காண் – வாருலகில் உண்டவுடனே பசியும் உண்டாகும் பொய்யலவே வண்டருறை பூங்குழலே ! வாழ்த்து. “மேற்கூறிய பாடலின் பொருளானது, ”இனிப்புள்ள சீரகச்சம்பா அரிசியை உண்பவர்களுக்கு, மீண்டும் உண்பதற்குள் பசியைத் தூண்டும் வளிநோய்களைப் போக்கும்” என்பதாகும். இந்நெல்லின் அரிசி பிரியாணிகள் (Briyani)செய்ய ஏற்றது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பண்டைய நெல்வகைகளில், சீரகச்சம்பா தரத்திலும், விலையிலும் உயர்ந்த இடத்தைப் பெற்றுள்ளது. இந்த அரிசியின் சோறு மருத்துவப் பயனுடையது.
சீரக சம்பா அரிசி குறிப்புகள்
இது ஒரு உயர்வகை அரிசி. சீரக சம்பா அரிசி அக்காலத்தில் அரசர்களின் உணவு. நெல் சிறு சீரகத்தின் அளவில் இருக்கும் எனவே சீரகசம்பா எனப்படும். இது தாளடியில் அல்லது ஒருபோகமாக சம்பாவில் விளைவிக்க வேண்டும். தஞ்சையின் கிழக்கு பகுதியில் விளைகிறது. திருச்சி பகுதியிலும் தற்போது விளைகிறது. இதற்கு தஞ்சாவூர் மாவட்டத்தில் புவிசார் குறியீடு வாங்க முயற்சிகள் எடுப்பதாக அறிகிறேன். மதுரையில் உள்ள அனைத்து பிரியாணி கடைகளிலும் இந்த வகை அரிசியையே பிரியாணி செய்ய பயன்படுகின்றனர்.
சீரக சம்பா அரிசியின் நன்மைகள்
எளிதாக செரிப்பதோடு(Easily Digestable), இரைப்பை(Gastric) ஒழுங்கீனங்களைத் தடுத்து பசியைத் தூண்டக்கூடியது. வாத நோய்களைப் (Rheumatic Disease) குணமாக்கும். குடல்புண்(Ulcer), வயிற்றுப்புண்(Severe), வாய்ப்புண்(Mouth ulcer) குணமாகும். கண் நரம்புகளுக்கு(Eye Nerves) புத்துணர்வு கொடுத்து, பார்வையை தெளிவாக்கும். இரத்தத்தை(Blood purification) சுத்தமாக்கும். உடலில் தேவையற்ற நீரை வெளியேற்றும்.